அணிலே அணிலே ஓடிவா

அணிலே அணிலே ஓடிவா
அழகிய அணிலே ஓடிவா
கொய்யாமரம் ஏறிவா
குண்டுப்பழம் கொண்டுவா
பாதிப்பழம் என்னிடம்
மீதிப்பழம் உன்னிடம்
கூடிக்கூடி இருவரும்
கொறித்துக் கொறித்துத் தின்னலாம்

அம்மா இங்கே வா வா!

அம்மா இங்கே வா வா!
ஆசை முத்தம் தா தா!
இலையில் சோறு போட்டு
ஈயை தூர ஓட்டு
உன்னை போன்ற நல்லார்
ஊறில் யாவர் உள்ளார்
என்னால் உனக்குத் தொல்லை
ஏதும் இங்கும் இல்லை
ஐயம் இன்றி சொல்வேன்
ஒற்றுமை என்றும் பலமாம்
ஓதும் செயலே நலமாம்
ஔவை சொன்ன மொழியாம்
அஃதே எனக்கு வழியாம்