படித்த அனைத்து சிறுவர் பாடல்களையும் தொகுத்துள்ளேன். உங்கள் குழந்தைகள் இவற்றை படிக்க, பாட உதவுங்கள்.
எனக்கு நல்ல கல்வி அளித்து, நல்வழி காட்டிய என் தந்தை-தாயார், பழனியில் எங்கள் தெரு கதைபாட்டி, என் தமிழ் ஆசிரியர் திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்கள், தினமலர், சிறுவர்மலர், சுட்டி விகடன், தினத்தந்தி, தினகரன், தினமணி, அம்புலிமாமா, கோகுலம், பாலமித்ரா, கண்ணன், கோகுலம், ரத்னபாலா, பூந்தளிர், டிங்டாங், டமாரம், சங்கு, பாலர் மலர், பாலவிநோதினி, பால தீபிகை, முத்து, பாப்பா மலர், அணில், ஜில்ஜில், மத்தாப்பு, பூஞ்சோலை, கரும்பு முதலிய சிறுவர் இதழ்கள், இந்தத் தொகுப்பில் உள்ளவற்றை எல்லாம் எழுதிய கவிஞர்கள்/ஆசிரியர்கள் மற்றும் இணைய வலைப்பூக்கள், பத்திரிக்கைகள், இங்கே வாசிக்கும் அனைவருக்கும் எனது நன்றிகள்.
இந்தப் பழையப் புத்தகங்கள் எங்கேனும் கிடைத்தால் உரிய தொகை செலுத்திப் பெற்றுக் கொள்ள விரும்புகிறேன். இவற்றைத் தகுந்த அனுமதியுடன் மின்னூலாகத் தொகுக்க விரும்புகிறேன்.
பாட்டுக்கள், தகவல்கள் மற்றும் கதைகள் சேகரிக்கும் இம்முயற்சிக்கு அடிப்படை ஆதாரமான என் மகள் தர்ஷிணிக்கு அர்ப்பணம். அவளுக்காகத்தான் இதைத் தொகுக்கிறேன்.