அம்மா சுட்ட தோசை by பிரசாத் வேணுகோபால்

அம்மா சுட்ட தோசை
அரிசி மாவு தோசை
நெய்யை ஊற்றிச் செய்த
முறுவ லான தோசை
வறுத்த கடலைச் சட்டினி
கரைத்து தொட்டு திண்ணுவேன்
வயிற்று பசி தீர்ந்ததும்
தட்டைக் கழுவி கவிழ்த்துவேன்...

எங்க ஊரு யானை by பிரசாத் வேணுகோபால்

எங்க ஊரு யானை
உருவில் பெரிய யானை
தெருவில் நடந்து வந்தால்
திரளும் கூட்டம் காண

பசிக்கும் யானை புசிக்க
பழத்தை அள்ளித் தருவோம்
பாகன் கையில் கொடுக்க
பணமும் கொஞ்சம் தருவோம்

முறங்கள் போன்ற காதை
முன்னும் பின்னும் ஆட்டி
தொங்கும் தும்பிக் கையைத்
தூக்கித் தருமே ஆசி.!


பூமியில் நாமும் வாழ்கின்றோம்


பட்டுப் பாவாடை


பட்டு குட்டிப் பாப்பாவுக்கு
குட்டி பட்டு பாவாடை.

திருவிழா வந்ததற்கு
தாத்தா தந்த பாவாடை.

மாம்பழம் நிறமிருக்கும்
மஞ்சள் வண்ண பாவாடை.
தங்கம்போல ஜொலிஜொலித்து
தகதகக்கும் பாவாடை.

கையிரண்டும் பக்கம் நீட்டி
ஆலவட்டம் சுற்றினால்
ஆளோடு சுற்றிச் சுழலும்
அழகு வண்ண பாவாடை.

பள்ளி சென்று நாளை எனது
நண்பர்களுக்குக் காட்டுவேன்.
தாத்தா வந்த செய்தி சொல்லி
மகிழ்ந்து வீடு திரும்புவேன்.

- குழந்தைக் கவிஞர்.புதுகை அப்துல்லா