வண்ணமயமாய் சிறகு கொண்டு
மேகம் சுற்றும் பறவையினம்
அங்கும் இங்கும் ஆனந்தமாய்
உல்லாசங் கொண்டு பறந்திடுமே
இரண்டு நெல்மணி போதுமென்றே
இனிய கீதம் இசைக்கிறதே!
புல், பச்சை, சிறிய தாவரங்கள்,
மரங்கள் சிறிய செடிகொடிகள்
காயும் கனியும் தானியமும்
தந்தே வாழ்வை வளமாக்கும்
மனிதன், விலங்கு, மீனோடு
மரங்கள் செடிகள் பூச்சிகளும்
பூமியின் கீழும் பூமியிலும்
நம் பூமி தாங்கி நிற்கிறதே!
மற்ற உயிர்களும் இனங்களுமே
மனித உயிரைப் போன்றதுவே
சேர்ந்தே மகிழ்ந்து அவையனைத்தும்
மனித உயிர்க்கு உதவுவதால்
நாமும் பூமியில் மனிதர்களாய்
நலமாய் என்றும் வாழ்கின்றோம்
அனைவரும் இயற்கையில் சமமென்றே
பூமி கூடி வாழும் வீடாகும்.
--"வளரும் குழந்தை" கவிஞர் விதூஷ் ;)
0 comments:
Post a Comment