பூனைக்குட்டி

பூனைக்குட்டி பூனைக்குட்டி கூட வராதே
பொழுதோடு திரும்பி வருவேன் கூட வராதே

பாலைக் குடித்து ஆட்டம் போடு கூட வராதே
பஞ்சு மெத்தையில் படுத்துப் புரளு கூட வராதே

கோபப் பார்வை பார்க்க வேண்டாம் கூட வராதே
குட்டிப் பாப்பா முத்தம் கொடுப்பேன் கூட வராதே

பள்ளிக்கூடம் போகின்றேன் கூட வராதே
பார்ப்பவரெல்லாம் கிண்டல் செய்வார் கூட வராதே!
-பாவண்ணன்


.

2 comments:

அமுதா said...

நல்ல பகிர்வு

ramesh sadasivam said...

நல்ல ப்ளாக் அக்கா.

தஞ்சாவூர் பொம்மைப் பற்றிய கவிதை அருமை.

//எந்தத் திசையில் விழுந்தாலும்
எழுந்தே நிற்போம் பொம்மைபோல்!//

ரசித்த வரிகள்.

இந்த தொகுப்போடு இந்த குட்டிக் கிருஷ்ணர் புகழாரத்தையும் சேர்த்துக் கொள்ளுங்கள்

http://iamhanuman.blogspot.com/2008/08/blog-post_22.html