தாலாட்டு -2

ஆராரோ ஆராரோ - கண்ணே நீ
ஆராரோ ஆரிரரோ!
ஆராடித்தார் நீ அழுதாய்? கண்ணே உனை
அடித்தாரைச் சொல்லி அழு!

மாமி அடித்தாளோ? - உன்னை
மல்லியப்பூச் செண்டாலே!
மாமன் அடித்தானோ! - உன்னை
மாலையிடும் கையாலே!

அக்கா அடித்தாளோ? - உன்னை
அரளிப்பூச் செண்டாலே!
அடித்தாரைச் சொல்லியழு - அவர்க்கு
ஆக்கினைகள் செய்திடுவேன்!

தொட்டாரைச் சொல்லியழு - அவர்க்குத்
தோள்விலங்கு பூட்டிடுவேன்!

(இத்தாலாட்டின் முடிவில் தூங்காத குழந்தையொன்று தாய்க்குப் பதில் கொடுக்கிறது, கற்பனைதான்.)

யாரும் அடிக்கவில்லை! - என்னை
ஐவிரலும் தீண்டவில்லை!
பசிக்கல்லவோ நான் அழுதேன்! - என்றன்
பாசமுள்ள தாயாரே!

தாலாட்டு

முத்துச் சிரிப்பழகா!
முல்லைப்பூ பல்லழகா!

வெத்து குடிசையிலே
விளையாட வந்தாயோ?

ஏழைக் குடிசையிலே
ஈரத் தரைமேலே

தாழம்பாய் போட்டுத்
தவழ்ந்தாட வந்தாயோ

தரையெல்லாம் மேடுபள்ளம்
தவழ்ந்தால் உறுத்தாதோ?

வானவில்

நாயும் கழுதையும் #அப்பா எப்பவோ சொன்ன குட்டிக் கதைகள்


சமாதானம் by பிரசாத் வேணுகோபால்


ஒரே அடியில் ஒன்பது பேரைக் கொன்றவன்


காட்டில் ஒரு முயல் குட்டியாம்! - நீதிக் கதை


கோபக்கார மேகங்கள்.

CBSE Vs. ICSE - ஏன் இவை மெட்ரிக் அல்லது சமச்சீர் கல்வி-யை விட மேலானது


பள்ளிச் சிறார்களுக்கான competitive பரீட்சைகள்


சாவி தந்தால் ஓடிடும் கார்


ஜவ்வு மிட்டாய்


விட்டில்பூச்சி


எறும்பைப் பார்த்துக் கற்றுக் கொள்


வணக்கம் சொல்வோம்


அண்ணல் காந்தி

எந்தத் தொழிலைச் செய்யலாம்

எறும்பும் சேமிப்பும்


தங்கை


மயிலே குயிலே


குரங்கு


எலியே எலியே


சின்னச் சின்ன நாய்க்குட்டி


நற்பண்புகள்


பொம்மை

பழம்பானையும் சுண்டெலியும்

சிட்டே சிட்டே


பூனையாரே பூனையாரே


கோயில் யானை வருகுது


ஆல மரத்து ஊஞ்சல்


பலூன்


சிறந்த பண்புகள்


ஆலமரம்


கொட்டுது பார் மழை


மியாவ் மியாவ் பூனைக்குட்டி


உப்பு


ஜப்பான் கதை கேளு


நத்தையாரே நத்தையாரே

படிக்க வா

ஆட்டம் பாட்டம்


அப்பாக்குட்டி சுப்பாக்குட்டி

அப்பாக்குட்டி மகன் சுப்பாக்குட்டி
சுப்பாக்குட்டி மகன் சுண்டெலியாம்
சுண்டெலி ராஜனுக்கு கலியாணமாம்
கொக்கைக் கூப்பிடுங்கள் பந்தல் போட
குருவியை கூப்பிடுங்கள் பூப்போட
தவளையை கூப்பிடுங்கள் தாரை ஊத
அப்பாக்குட்டி மகன் சுப்பாக்குட்டி
சுப்பாக்குட்டி மகன் சுண்டெலியாம்

சப்பாணி கொட்டுவானாம்

சப்பாணி கொட்டுவானாம்
தயிருஞ்சோறும் திம்பானாம்
அப்பஞ்சுட்டா திம்பானாம்
அவலிடிச்சா மொக்குவானாம்
மொக்குவானாம் மொக்குவானாம்

செடியை நட்டு வளர்ப்பேனே


என்னைக் காக்கும் அம்மாவே


குயிலே குயிலே


பறவைக் கப்பல்


மெய்யெழுத்து அறிமுகப்பாடல்


ராமசாமிக்கு தோட்டம் உண்டு


சேவல்


வண்ணமயில்