தாலாட்டு -2

ஆராரோ ஆராரோ - கண்ணே நீ
ஆராரோ ஆரிரரோ!
ஆராடித்தார் நீ அழுதாய்? கண்ணே உனை
அடித்தாரைச் சொல்லி அழு!

மாமி அடித்தாளோ? - உன்னை
மல்லியப்பூச் செண்டாலே!
மாமன் அடித்தானோ! - உன்னை
மாலையிடும் கையாலே!

அக்கா அடித்தாளோ? - உன்னை
அரளிப்பூச் செண்டாலே!
அடித்தாரைச் சொல்லியழு - அவர்க்கு
ஆக்கினைகள் செய்திடுவேன்!

தொட்டாரைச் சொல்லியழு - அவர்க்குத்
தோள்விலங்கு பூட்டிடுவேன்!

(இத்தாலாட்டின் முடிவில் தூங்காத குழந்தையொன்று தாய்க்குப் பதில் கொடுக்கிறது, கற்பனைதான்.)

யாரும் அடிக்கவில்லை! - என்னை
ஐவிரலும் தீண்டவில்லை!
பசிக்கல்லவோ நான் அழுதேன்! - என்றன்
பாசமுள்ள தாயாரே!

தாலாட்டு

முத்துச் சிரிப்பழகா!
முல்லைப்பூ பல்லழகா!

வெத்து குடிசையிலே
விளையாட வந்தாயோ?

ஏழைக் குடிசையிலே
ஈரத் தரைமேலே

தாழம்பாய் போட்டுத்
தவழ்ந்தாட வந்தாயோ

தரையெல்லாம் மேடுபள்ளம்
தவழ்ந்தால் உறுத்தாதோ?

வானவில்

நாயும் கழுதையும் #அப்பா எப்பவோ சொன்ன குட்டிக் கதைகள்


சமாதானம் by பிரசாத் வேணுகோபால்

ஒரே அடியில் ஒன்பது பேரைக் கொன்றவன்


காட்டில் ஒரு முயல் குட்டியாம்! - நீதிக் கதை


கோபக்கார மேகங்கள்.

CBSE Vs. ICSE - ஏன் இவை மெட்ரிக் அல்லது சமச்சீர் கல்வி-யை விட மேலானது


பள்ளிச் சிறார்களுக்கான competitive பரீட்சைகள்


சாவி தந்தால் ஓடிடும் கார்


ஜவ்வு மிட்டாய்


விட்டில்பூச்சி


எறும்பைப் பார்த்துக் கற்றுக் கொள்


வணக்கம் சொல்வோம்


அண்ணல் காந்தி

எந்தத் தொழிலைச் செய்யலாம்

எறும்பும் சேமிப்பும்


தங்கை


மயிலே குயிலே