கருங்குருவி வீட்டில் ஒரு கலியாணம் நடந்ததாம்
காட்டில் உள்ள பறவையெல்லாம் கலந்து வேலை செய்திற்றாம்
ஒரு ஊர்க்குருவி ஓடி ஓடி ஊருக்கெல்லாம் சொல்லிற்றாம்
இரண்டுக் குயில் பறந்து வந்து இனிமையாகப் பாடிற்றாம்
மூன்று மயில் நடந்து வந்து முனைந்தழகாய் ஆடிற்றாம்
நான்கு அன்னம் நடந்து வந்து நாட்டியங்கள் செய்திற்றாம்
ஐந்துக் கிளி கூடிப் பெண்ணை அலங்கரிக்கச் சென்றதாம்
ஆறு புறா கூடிப்பிள்ளை அழகுச்செய்ய போயிற்றாம்
ஏழு மைனா கூடிக்கொண்டு விருந்தினரை அழைத்ததாம்
எட்டுக் காடை கூடிக்கொண்டு கொட்டுமேளம் கொட்டிற்றாம்
ஒன்பது காக்கை கூடிக்கொண்டு உறவினரை அழைத்தாம்
பத்து கொக்கு பறந்து வந்து பந்தல் வேலை பார்ததாம்
காட்டில் ஒரு திருமணம்
Posted by
Vidhoosh
on Wednesday, July 28, 2010
Labels:
எண்கள்,
பறவை-விலங்கு-பூச்சி இனங்கள்
5 comments:
onnu rendu moonu katthukitten
ஒரு திருமணத்தில் வெறுமனே கலந்து கொள்ளாமல் அந்த திருமணம் வெற்றிகரமாக நடைபெற பார்வையாளராக இல்லாமல் ஓடியாடி வேலை செய்ய வேணும் என சொன்ன கருத்து அருமை.
நல்லாருக்கு விதூஷ்
குழந்தை ஒன்று எட்டிப் பார்த்து மெல்ல சிரிக்கிறது என் மனதில்...
intha kathai padithal small kids know one to ten & also write a story to know ato z & a to .*.
Post a Comment