toungue twister


பச்சைக் குழந்தை வாழைப் பழத்திற்காக விழுந்து விழுந்து அழுதது.

கொக்கு நெட்ட கொக்கு, நெட்ட கொக்கு இட்ட முட்ட கட்ட முட்ட.

வியாழக்கிழமை கிழட்டு ஏழை கிழவன் வாழைப் பழத்தில் வழுக்கி விழுந்தான்.

வாழைப் பழம் வழுக்கி கிழவி வழியில் நழுவி கீழே விழுந்தாள்

ஓடற நரியில ஒரு நரி கிழ நரி கிழநரி முதுகுல ஒரு பிடி நரை முடி

கடலோரத்தில் அலை உருளுது பிரளுது தத்தளிக்குது தாளம் போடுது

யாரு தெச்ச சட்டை தாத்தா தெச்ச சட்டை

ப்ளூ லாரி உருளுது பிரளுது

ஆனை அலறலோடு அலற அலறியோட

சைக்கிள் ராலி போலொரு லாரி ராலி

ஷீலாவுக்கு சீக்கிரம் சீலை தேவை

ரெட் புக் ப்ளூ புக்

ரெட் லாலி பாப் யெல்லோ லாலி பாப்

கடலோரம் உரல் உருளுது.
கடலோரம் உரல் உருளுது!

புட்டும் புதுப் புட்டு
தட்டும் புதுத் தட்டு
புட்டைக் கொட்டிட்டு
தட்டைத் தா.

வீட்டுக்கிட்ட கோரை
வீட்டுக்கு மேல கூரை
கூரை மேல நாரை.

துள்ளும் கயலோ
வெள்ளம் பாயும்
உள்ளக் கவலை
எள்ளிப் போகும்.

கருகும் சருகும் உருகும்
துகிரும் தீயில் பட்டால்!



========================================
லாரி நிறைய இறாலு, அதுல நாலு இறாலு நாறுன இறாலு (நன்றி நட்புடன் ஜமால்)

5 comments:

அகல்விளக்கு said...

வளரும் குழந்தைகளுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும்...

மங்குனி அமைச்சர் said...

ஹி,ஹி, நானும் ஒரு வாட்டி சொல்லிப்பாத்தேன்

நட்புடன் ஜமால் said...

லாரி நிறைய இறாலு, அதுல நாலு இறாலு நாறுன இறாலு

அபி அப்பா said...

கடுப்பேத்தாதீங்க மைலார்ட்:-)) முதல்ல விஜய்காந்தை சொல்ல சொல்லுங்க பின்ன நான் சொல்றேன்:-)

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

சூப்பர்!