ஏகாம்பரனார் ஏமாந்தார் (பாலர் மலர்-1949)

பாராக்கள் முடியும் இடத்தில் எல்லாம் ஏகப்பட்ட ஆச்சரியகுறிகள் இருப்பதால் கவிதை என்று நினைத்து விட வேண்டாம். :))
பிரதியின் scanned copy தந்து உதவிய கிங் விஸ்வா-வுக்கு நன்றி.
கதை ஆசிரியர் - ஜெ.எத்திராஜன்

மிஸ்டர் எகாம்பரனாரைக் கண்டால், நான் மட்டுமல்ல; நீங்கள்கூடத்தான் ஆச்சரியப்படுவீர்கள்.'இந்த பஞ்சகாலத்திலும், இப்படி ஒருமனுஷர் உண்டா? என்று ஆச்சரியப்படுவீர்கள். ஏன் தெரியுமா? அவர் அவ்வளவு பெரிய மனிதர். பெரிய மனிதரென்றால் அறிவில் பெரியவரல்ல; புகளில் பெரியவரல்ல; தொந்தியில்தான் பெரியவர்! தொப்பைக் கணபதியையும் தோற்கடிக்கக்கூடிய தொந்தி படைத்தவர்!

அவருடைய தலைமயிர் பாகவதர் தலைமயிர் போல பின் கழுத்தை மறைத்துக்கொண்டு இருக்கும். அவர் காதுகளிலே எப்போதும் பிரகாசித்துக் கொண்டிருக்கும், கடுக்கன்கள்!

இப்படிப்பட்ட எகாம்பரனார் சுதந்திர தினத்தன்று ஒரு சினிமாவுக்குச் செல்ல ஆசைப்பட்டார். அவர் எப்பொழுதுமே நாலணா டிக்கெட்டில்தான் சினிமாவுக்குப் போவார். அதற்குமேல் அவர் டிக்கெட் வாங்கமாட்டார். வாங்குவதற்கு அவர் மனம் இடங் கொடுத்தால்தானே!

ஆனால், அன்று அவருக்கு நாலணா டிக்கெட் கிடைக்குமா? அதுதான் சந்தேகம். விசேஷ நாள் ஆனதால், டிக்கெட் கிடைக்காதே என்று அவர் எண்ணினார். நீண்ட நேரம் யோசனை செய்தார்.

கடைசியில் அவருக்கு என்ன யோசனை தோன்றியதோ, தெரியவில்லை. அறைக்குள் சென்றார் தன மனைவியின் பெட்டியைத் திறந்தார். அப்பொழுது, அவருடைய மனைவி சமையல் அறையில் ஏதோ வேலை செய்து கொண்டிருந்தாள்.

ஏகாம்பரனார் பெட்டியைத் திறந்ததும், அதிலிருந்து ஒரு புடவையையும் ரவிக்கையையும் வெளியே எடுத்தார்; பெட்டியை மூடினார். பிறகு பெட்டியிலிருந்து எடுத்த புடவையைக் கட்டிக் கொண்டார்: ரவிக்கையைப் போட்டுக் கொண்டார். தலைமயிரை வெள்ளைக்காரிகள் போல வாரிக் கொண்டார்; நெற்றியில் ஒரு குங்குமப் போட்டும் வைத்துக் கொண்டார். நிலைகண்ணாடியில் தன் உருவத்தைப் பார்த்தபோது, அவருக்கே, "அடாடா, இவ்வளவு அழகாக அசல் பெண் போலவே இருக்கிறோமே!" என்ற ஆச்சரியம் உண்டானது. ஆனால் அவருடைய தொந்தி மட்டும் முன்னாள் தள்ளிக் கொண்டிருந்தது. அதற்காக அவர் கவலைப் படவில்லை. 'நம்மை ஒரு கர்ப்பிணி என்று நினைத்துக் கொள்ளட்டுமே' என்று அவரே முடிவு கட்டினார். தன் மனைவிக்குத் தெரியாமல் சினிமாக் கொட்டகைக்கு நேராகப் புறப்பட்டார்.

அங்கே நாலணா டிக்கெட் கொடுக்கும் இடத்தில் பெண்களின் கூட்டம் அபாரமாக இருந்தது. எல்லோரும் 'க்யூ'வில் நின்றார்கள். ஏகாம்பரனாரும் அவர்கள் பின்னால் பொய் நின்றார். ஆனால், அந்த 'க்யூ' மிகவும் நீளமாக இருந்ததால், 'டிக்கெட் கிடைக்காதோ?" என்ற சந்தேகம் அவருக்குத் தோன்றியது.

உடனே கடைசியில் நிற்பதை விட்டுவிட்டு, 'க்யூ'வின் முன்னாள் வந்தார். அங்கு முன்னாள் நிற்கும் ஒரு ஸ்த்ரியைப் பார்த்து, "ஏம்மா, நான் வயித்துப் பில்லைக்கார். கொஞ்சம் இடங்கொடுத்தால், உனக்குக் கோடிப் புண்ணியம்" என்றார்.

அதற்கு அவள், "வயித்துப் பிள்ளைக்காரி எதுக்காக சினிமா பார்க்கணும்? பேசாமல் வீட்டிலே இருக்கிறதுதானே? நான் ரெண்டுமணி நேரமா இந்த வெய்யிலிலே காத்துக் கிட்டே கிடக்கேன். உனக்கு இடம் வேணுமினா கடைசியிலே பொய் நில்லு" என்று 'படபட'வென்று பதில் கூறி விட்டாள்.

ஏகாம்பரனாருக்கு என்ன பதில் சொல்வதென்றே புரியவில்லை. பேசாமல் கடைசியில் போய் நின்று விட்டார், அவர். 'க்யூ'வில் நிற்பதைக் கண்டவர்களெல்லாம், "இந்தப் பொம்மனாட்டியைப் பாருங்க. இவள் நிற்கிற இடத்திலே நாலு பேரு நிற்கலாமே!" என்று அவர் காதில் விழும்படி கேலி வேறு செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.

இவ்வளவையும் பொறுத்துக் கொண்டு, 'க்யூ'வில் நீண்டநேரம் நின்றார், எகாம்பரனார். மெதுவாக 'க்யூ' நகர நகர அவரும் தொந்தியைத் தூக்கிக் கொண்டு நகர்ந்தார். டிக்கெட் கொடுக்கும் இடத்துக்கு முன்னாள் அவர் வந்ததுதான் தாமதம். 'டக்'கென்று கதவை மூடிவிட்டார், டிக்கெட் விற்பனர்! கதவின் மேல், 'டிக்கெட் தீர்ந்து விட்டது' என்று கோட்டை எழுத்தில் எழுதியிருந்தது.

பாவம், ஏகாம்பரனார் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினார். வீட்டில் நுழைந்தது, அவர் மனைவி அவர் கோலாகலத்தைக் கண்டு சிரித்தாள். அவருடைய கதையைக் கேட்டதும், அவள் விழுந்து விழுந்து சிரித்தாள்.

2 comments:

கவி அழகன் said...

நல்ல இருக்கு

எஸ்.கே said...

கதை நன்றாக இருந்தது! நான் சிறு வயதில் படித்த கதைகள் ஞாபகம் வந்தது!