வண்ணமயில்


அழகுப் பறவை வண்ணமயில் -அதன்
ஆட்டம் அடடா என்ன ஒயில்
மழைமுகில் கண்டால் மகிழ்ந்தாடும் -நம்
மனமும் அதனால் நெகிழ்ந்தாடும்!
நொச்சி இலைபோல் கால் விரல்கள் -மெல்ல
நொடித்து நடிக்கும் நீள்கழுத்து
உச்சிக் கொண்டை எழில் கோலம் -அதன்
உடலின் நிறமோ கடல் நீலம்!
வண்ணத்தோகை மண்புரளும் -அதில்
வனப்பு கொஞ்சும் கண்மிரளும்
கண்ணைக் கவரும் பேரழகு -அந்தக்
காட்டில் மயில்போல் யாரழகு!

0 comments: