காட்டில் ஒரு திருமணம்

கருங்குருவி வீட்டில் ஒரு கலியாணம் நடந்ததாம்
காட்டில் உள்ள பறவையெல்லாம் கலந்து வேலை செய்திற்றாம்
ஒரு ஊர்க்குருவி ஓடி ஓடி ஊருக்கெல்லாம் சொல்லிற்றாம்
இரண்டுக் குயில் பறந்து வந்து இனிமையாகப் பாடிற்றாம்
மூன்று மயில் நடந்து வந்து முனைந்தழகாய் ஆடிற்றாம்
நான்கு அன்னம் நடந்து வந்து நாட்டியங்கள் செய்திற்றாம்
ஐந்துக் கிளி கூடிப் பெண்ணை அலங்கரிக்கச் சென்றதாம்
ஆறு புறா கூடிப்பிள்ளை அழகுச்செய்ய போயிற்றாம்
ஏழு மைனா கூடிக்கொண்டு விருந்தினரை அழைத்ததாம்
எட்டுக் காடை கூடிக்கொண்டு கொட்டுமேளம் கொட்டிற்றாம்
ஒன்பது காக்கை கூடிக்கொண்டு உறவினரை அழைத்தாம்
பத்து கொக்கு பறந்து வந்து பந்தல் வேலை பார்ததாம்



.

6 comments:

Jaleela Kamal said...

நல்ல பணி எல்லா அம்மாமார்களுக்கும் அவரவர் குழந்தைகளுக்கு பார்த்து சொல்லிகொடுக்க வாழை பழத்தை உறித்து கையில் கொடுத்து இருக்கீங்க. வித்யா.

Jaleela Kamal said...

உங்கள் ஹிந்தி பிலாக்கில் பாண்ட் சைஸ் கொஞ்சம் பெரிது படுத்தினால் படிக்க வசதியா இருக்கும்.

பழமைபேசி said...

படிக்கப் படிக்க பரவசமா இருக்கு இந்தப் பாட்டு.... வெயில்ல மழை வரும் போது ஒரு பாட்டுப் பாடுவோம்... தெரிஞ்சவங்களைக் கேட்டு, அதைப் போட முடியுமாங்க?

Vidhoosh said...

நன்றி ஜலீலா. ஹிந்தி பிளாக்கிலும் எழுத்துக்களை சரி செய்து விட்டேன்.

-வித்யா

Vidhoosh said...

நன்றி பழமைபேசி. முயற்சிக்கிறேன்.

வித்யா

பழமைபேசி said...

நரிக்கும் கழுதைக்கும் கல்யாணம்... ஊர்கோலம்...அப்படி வரும்ங்க!