கூடி வாழ்வோம்

பறவை எல்லாம் பாடுச்சு
பக்கம் வந்து தேடுச்சு
கறவை மாடு சிரிச்சுச்சு
கறந்து பாலும் தந்துச்சு..!
குடிச்சி பறவை மகிழ்ந்துச்சு
கூட்டம் சேர கத்துச்சு
பசிக்கு இங்கே வந்திட
பாடிப் பாடி அழைச்சிச்சு..!
எங்கிருக்கும் பறவையும்
எகிறிப் பறந்து வந்துச்சு
இனத்தின் குரலைக் கேட்டுச்சு
இறங்கி வந்து பார்த்துச்சு..!
கோமாதா நமக்கு எல்லாம்
குடிக்க பாலும் தந்துச்சு
கூடி நாமும் கூட்டம் போட்டு
`அன்னை' யென்று சொல்லுச்சு..!
பாதுகாக்கும் தாயாக
பட்டி தொட்டி சொல்லுது
சாதுவாக இருந்த அதுவும்
சினந்து காடு வெல்லுது..!
பறவைக் கூட்டம் நாமெல்லாம்
போற்றி அதை வணங்குவோம்
சிறகாய் நாமும் இருந்துமே
பறக்க வைத்து மகிழுவோம்..!

8 comments:

விஜய் said...

முதல் வகுப்புக்கு படமாய் வைக்கலாம்

வாழ்த்துக்களுடன்

விஜய்

Radhakrishnan said...

மிகவும் அருமையாக இருக்கிறது

நேசமித்ரன் said...

ஹை நல்லா இருக்கு

வாசிக்கும் போது ரைமிங் தொனிக்குது உள்ளே

பனித்துளி சங்கர் said...

மீண்டும் குழந்தையாக மாறிப்போணதாய் ஒரு உணர்வு . மிகவும் அருமை . பகிர்வுக்கு நன்றி

T.V.ராதாகிருஷ்ணன் said...

மிகவும் அருமை

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

படிக்கும்போது சிறு குழந்தையாய் உணர்ந்தேன்!!

நட்புடன் ஜமால் said...

குழந்தைகளுக்கு எளிமையான வரிகள்

சிற்பி said...

குழந்தைகளுக்கான மிகப் பயனுள்ள தளம்.தங்கள் சேவை என்னைப் போன்ற ஆசிரியர்க்கு மிகவும் தேவை.


கோகுலன்.பெ
தலைமை ஆசிரியர்