(இணையத்தில் இருந்து சேகரித்துத் தொகுத்தவை. இவற்றில் சிலவற்றுக்கு விடை தெரியவில்லை. தெரிந்தால் தந்து இந்தத் தொகுப்பு முழுமையடையச் செய்யவும். இன்னும் விடுகதைகள் கிடைக்கும் போதெல்லாம் தொகுத்து வெளியிடுவேன். உங்களுக்கு தெரிந்தவற்றையும் நேரமிருப்பின் பகிரவும். நன்றி)
ஒருவரின் நுண்ணறிவை ஒருவர் அறிவதற்கு எழுப்புகின்ற புதிர்களே விடுகதைகள் எனப்படும். ஏட்டில் எழுதப்பெறாத இலக்கியம் என்று விடுகதைகளைக் கூறலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் விடுகதைகள் போடுவதைக் காணலாம்.இதனை வாய்மொழி இலக்கியம் என்றும் கூறுவார்கள்.
பொதுவாக விடுகதைகள் இரண்டு வகையாக அமைந்துள்ளன. ஒன்று கவிதை நடையில் அமைந்துள்ளவை; மற்றொன்று உரைநடையில் அமைந்தவை. மக்களின் சிந்தனைத் திறனையும் கற்பனைத் திறனையும் விடுகதைகள் பெரிய அளவில் காட்டுகின்றன.சில விடுகதைகள் எதுகை மோனையுடன் அழகான சொல்லாட்சி பெற்று விளங்குகின்றன.
எல்லாக் காலங்களிலும் சிறியவர் முதல் பெரியவர் வரை எல்லோரும் கேட்டின்புறும் வகையில் அமைந்திருப்பது விடுகதைகள் ஆகும். குழந்தைகள் இருக்கும் வீட்டில், ஓய்வு நேரத்தில் விளையாட்டாக விடுகதை போட்டுப் பாருங்களேன்...ஒரே மகிழ்ச்சியலை எழும்பும். வேடிக்கை என்ன வென்றால் ...நாம் போட்ட விடுகதைகளை பிறகு வீட்டிற்கு வருபரையெல்லாம் பார்த்து குழந்தைகள் மழலை மொழியில் 'அது என்ன ?...அது என்ன? ' என்று கேட்கும் விதமே தனி அழகு!
No | விடுகதை | No | விடை |
---|---|---|---|
1 | முத்துக்கள் இருக்கும். ஆனால் யாருமே பிரமிக்க மாட்டார்கள். அது என்ன? | 1 | வெண்டைக்காய் |
2 | வெளிச்சத்துடன் வருவான். இருட்டில் வரமாட்டான். அவன் யார்? | 2 | நிழல் |
3 | ஒட்டியவன் ஒருத்தன், பிரித்தவன் இன்னொருவன். அது என்ன? | 3 | கடிதம் |
4 | பட்டுப்பை நிறைய பவுண் காசு அது என்ன? | 4 | மிளகாய் |
5 | இமைக்காமல் இருந்தால் எட்டிப் பார்ப்பான். அவன் யார்? | 5 | கண்ணீர் |
6 | கண்ணுக்குத் தெரியாதவன்; உயிருக்கு உகந்தவன். அவன் யார்? | 6 | காற்று |
7 | தலையைச் சீவினால் தாளிலே மேய்வான். அவன் யார்? | 7 | பென்சில் |
8 | சுற்றுவது தெரியாது; ஆனால் சுற்றிக் கொண்டிருப்பான். அவன் யார்? | 8 | பூமி |
9 | வெள்ளை மாளிகையில் மஞ்சள் புதையல், அது என்ன? | 9 | முட்டை |
10 | கழற்றிய சட்டையை மறுபடியும் போடமாட்டான். அவன் யார்? | 10 | பாம்பு |
11 | அள்ள அள்ளக் குறையாது; ஆனால் குடிக்க உதவாது. அது என்ன? | 11 | கடல்நீர் |
12 | முள்ளுக்குள்ளே முத்துக்குவலயம். அது என்ன? | 12 | பலாப்பழம் |
13 | உரசினால் உயிரை விடுவான். அவன் யார்? | 13 | தீக்குச்சி |
14 | அள்ளும் போது சலசலக்கும் கிள்ளும் போது கண் கலங்கும் அது என்ன? | 14 | வெங்காயம் |
15 | வாயைப் பிளந்து வீதியோரங்களில் நிற்பான் அவன் யார்? | 15 | தபாற் பெட்டி, |
16 | முக்கண்ணன் சந்தைக்குப் போகின்றான் அவன் யார்? | 16 | தேங்காய், |
17 | மீன் பிடிக்கத் தெரியாதாம் ஆனால் வலை பின்னுவானாம் அவன் யார்? | 17 | சிலந்தி, |
18 | தொடலாம் ஆனால் பிடிக்க முடியாது அது என்ன? | 18 | தண்ணீர், |
19 | உணவை எடுப்பான் ஆனால் உண்ணமாட்டான் அவன் யார்? | 19 | அகப்பை, |
20 | வெள்ளம் வெள்ளமாக கறுப்பன் கண்ணீர் விட்டானாம் அவன் யார்? | 20 | மழை மேகம், |
21 | ஒற்றை கிண்ணத்துக்குள் இரட்டைத் தைலங்கள் அவை எவை? | 21 | முட்டை. |
22 | காலில் தண்ணீர் குடிப்பான், தலையில் முட்டையிடுவான் அவன் யார்? | 22 | தென்னைமரம் |
23 | எட்டாத ராணி இரவில் வருவாள். பகலில் மறைவாள் அவள் யார்? | 23 | நிலா |
24 | நடந்தவன் நின்றான். கத்தியை எடுத்து தலையைச் சீவினேன். மறுபடி நடந்தான். அவன் யார்? | 24 | பென்சில் |
25 | வால் நீண்ட குருவிக்கு வாயுண்டு. வயிறில்லை. அது என்ன? | 25 | அகப்பை |
26 | அம்மா போடும் வட்டம்,பளபளக்கும் வட்டம்,சுவையைக் கூட்டும் வட்டம். சுட்டுத் தின்ன இஷ்டம். அது என்ன? | 26 | அப்பளம் |
27 | வெள்ளை ஆளுக்கு கறுப்புத் தலைப்பாகை. அது என்ன? | 27 | தீக்குச்சி |
28 | ஓடையில் ஓடாத நீர், ஒருவரும் குடிக்காத நீர். அது என்ன? | 28 | கண்ணீர் |
29 | சலசலவென சத்தம் போடுவான், சமயத்தில் தாகம் தீர்ப்பான். அவன் யார்? | 29 | அருவி |
30 | தொடாமல் அழுவான், தொட்டால் பேசுவான். அவன் யார்? | 30 | தொலைபேசி |
31 | வீட்டுக்கு வந்த விருந்தாளியை வரவேற்க ஆளில்லை. அது என்ன? | 31 | செருப்பு |
32 | ஓயாமல் இரையும் இயந்திரமல்ல, உருண்டோடி வரும் பந்தும் அல்ல அது என்ன? | 32 | கடல் |
33 | சிறு தூசி விழுந்ததும் குளமே கலங்கியது அது என்ன? | 33 | கண் |
34 | மரத்துக்கு மரம் தாவுவான் குரங்கல்ல, பட்டை போட்டிருப்பான் சாமி அல்ல, அவன் யார்? | 34 | அணில் |
35 | அடிக்காத பிள்ளை அலறித் துடிக்கும், அது என்ன? | 35 | சங்கு |
36 | அக்கா விதைத்த முத்து, அள்ள முடியாத முத்து, அது என்ன? | 36 | கோலம் |
37 | வீட்டிலிருப்பான் காவலாளி, வெளியில் சுற்றுவான் அவன் கூட்டாளி, அவர்கள் யார்? | 37 | பூட்டும் சாவியும் |
38 | எத்தனை தரம் சுற்றினாலும் தலை சுற்றாது, அது என்ன? | 38 | மின்விசிறி |
39 | உயிரில்லாதவனுக்கு உடம்பெல்லாம் நரம்பு, அது என்ன? | 39 | பாய் |
40 | உருவத்தில் சிறியவன் உழைப்பில் பெரியவன், அவன் யார்? | 40 | எறும்பு |
41 | மழை காலத்தில் குடை பிடிப்பான், அவன் யார்? | 41 | காளான் |
42 | வடிவழகு மாப்பிள்ளை வயிற்றால் நடக்கிறார். அவர் யார்? | 42 | பாம்பு |
43 | யாரும் செய்யாத கதவு தானே திறக்கும் தானே மூடும். அது என்ன? | 43 | கண் இமை |
44 | வளைந்து நெளிந்து செல்பவள் வழியெங்கும் தாகம் தீர்ப்பாள் அவள் யார்? | 44 | ஆறு அல்லது அருவி |
45 | அடிக்காமல்,திட்டாமல் கண்ணீரை வரவழைப்பாள் அவள் யார்? | 45 | வெங்காயம் |
46 | வளைஞ்சு நெளிஞ்சு ஆடும் தண்ணீர் குடித்தால் சாகும் அது என்ன? | 46 | நெருப்பு |
47 | வெள்ளை ராஜாவுக்கு கறுப்பு உடை அது என்ன? | 47 | உழுந்து |
48 | தொட்டுப் பார்க்கலாம் எட்டிப் பார்க்கமுடியாது அது என்ன? | 48 | முதுகு |
49 | மாமா போட்ட பந்தல் மறுபடி பிரிச்சா கந்தல் அது என்ன? | 49 | சிலந்தி வலை |
50 | முறையின்றித் தொட்டால்,ஒட்டிக் கொண்டு உயிரை எடுப்பான் அவன் யார்? | 50 | மின்சாரம் |
51 | நூல் நூற்கும் நெசவாளிக்கு கட்டிக்கொள்ள துணியில்லை அது என்ன? | 51 | சிலந்திவலை |
52 | நடக்கவும் மாட்டேன், நகராமல் இருக்கவும் மாட்டேன் நான் யார்? | 52 | மணிக்கூடு |
53 | காலையிலும் மாலையிலும் நெட்டை மதியம் குட்டை நான் யார்? | 53 | நிழல் அல்லது விம்பம் |
54 | பற்கள் இருக்கும் கடிக்கமாட்டான் அவன் யார்? | 54 | சீப்பு |
55 | வெள்ளை மாளிகை உள்ளே செல்ல வாசல் இல்லை அது என்ன? | 55 | முட்டை |
56 | ஐந்து வீட்டிற்க்கு ஒரு முற்றம் அது என்ன? | 56 | உள்ளங்கையும் விரல்களும் |
57 | தொப்பொன்று விழுந்தான் தொப்பி கழன்றான் அவன் யார்? | 57 | பனம்பழம் |
58 | சட்டையைக் கழற்றினால் சத்துணவு அது என்ன? | 58 | வாழைப்பழம் |
59 | பட்டுப்பை நிறைய பவுண் காசு அது என்ன? | 59 | வத்தல் மிளகாய் |
60 | அடிக்காத பிள்ளை அலறித் துடிக்குது. அது என்ன? | 60 | சங்கு |
61 | தட்டச் சீறும் அது என்ன? | 61 | தீக்குச்சி |
62 | உரிச்ச புறா சந்தைக்குப் போகுது அது என்ன? | 62 | தேங்காய் |
63 | நீளவால் குதிரையின் வால் ஓடஓடக் குறையும் அது என்ன? | 63 | தையல் ஊசியும் நூலும் |
64 | உருவத்தில் சிறியவன் உழைப்பில் பெரியவன் அவன் யார்? | 64 | எறும்பு |
65 | கண்ணால் பார்க்கலாம் கையால் பிடிக்கமுடியாது அது என்ன? | 65 | நிழல் |
66 | முதுகிலே சுமை தூக்கி முனகாமல் அசைந்து வரும் அது என்ன? | 66 | நத்தை |
67 | ஓயாது இரையும் இயந்திரம் அல்ல.உருண்டோடி வரும் பந்தும் அல்ல அது என்ன? | 67 | கடல் அலை |
68 | வயதான பலருக்கு புதிதாக ஒரு கை அது என்ன? | 68 | வழுக்கை / பொக்கை |
69 | தலையைச் சீவினால் தாளில் நடப்பான் அவன் யார்? | 69 | பென்சில் |
70 | கல்லில் காய்க்கும்பூ தண்ணீரில் மலரும்பூ, அது என்ன பூ? | 70 | சுண்ணாம்பு |
71 | காற்றைக் குடித்து காற்றில் பறப்பான், அவன் யார்? | 71 | பலூன் |
72 | பச்சை நிற அழகிக்கு உதட்டுச் சாயம் பூசாமலே சிவந்தவாய் அவள் யார்? | 72 | கிளி |
73 | அம்மா படுத்திருக்க மகள் ஓடித்திரிவாள் அது என்ன? | 73 | அம்மி குளவி |
74 | கன்று நிற்க கயிறு மேயுது அது என்ன? | 74 | பூசனிக்கொடி |
75 | கசக்கிப் பிழிந்தாலும் கடைசிவரை இனிப்பான். அவன் யார்? | 75 | கரும்பு |
76 | பிடுங்கலாம் நடமுடியாது அது என்ன? | 76 | தலைமுடி |
77 | வாலால் நீர் குடிக்கும்,வாயால் பூச்சொரியும் அது என்ன? | 77 | விளக்கு |
78 | நன்றிக்கு வால் கோபத்துக்கு வாய் அது என்ன? | 78 | நாய் |
79 | உயரத்தில் இருப்பிடம்.தாகம் தீர்ப்பதில் தனியிடம் அது என்ன? | 79 | இளநீர் |
80 | தலையில் கீரீடம் வைத்த தங்கப்பழம் அது என்ன? | 80 | அன்னாசிப்பழம் |
81 | அடித்தாலும், உதைத்தாலும் அவன் அழ மாட்டான், அவன் யார்? | 81 | பந்து |
82 | காகிதம் கண்டால் கண்ணீர் விடும்,முக்காடு போட்டால் மூலையில் அமரும் அது என்ன? | 82 | பேனா |
83 | ஓயாது இரையும் எந்திரமல்ல, உருண்டோடி வரும் பந்துமல்ல, அது என்ன? | 83 | கடல் அலை |
84 | தலையை வெட்ட வெட்ட கறுப்பு நாக்கை நீட்டுவது அது என்ன? | 84 | பென்சில் |
85 | வாயிலே தோன்றி வாயிலே மறையும் பூ. அது என்ன? | 85 | சிரிப்பு |
86 | முயல் புகாத காடு எது? | 86 | முக்காடு |
87 | வீட்டுக்கு வந்த தொந்தியப்பன் தினமும் கரைகிறான். அவன் யார்? | 87 | நாட்காட்டி |
88 | நூறு கிளிக்கு ஒரே வாய். அது என்ன? | 88 | வாழைப்பூ |
89 | ஒட்டுத் திண்ணையில் பட்டுப் பாவாடை அது என்ன? | 89 | தோடு |
90 | பெட்டியைத் திறந்தால் பூட்ட முடியாது. அது என்ன? | 90 | தேங்காய் |
91 | எட்டுக்கால் ஊன்றி இருகால் படமெடுக்க வட்டக் குடைபிடித்து வாறாராம் வன்னியப்பு அது என்ன? | 91 | நண்டு |
92 | படபடக்கும்,பளபளக்கும் மனதுக்குள் இடம் பிடிக்கும் அது என்ன? | 92 | பட்டாசு |
93 | சங்கீதம் பாடுபவனுக்கு சாப்பாடு இரத்தம் அது என்ன? | 93 | கொசு / நுளம்பு |
94 | கந்தல் துணிக்காரி முத்துப் பிள்ளைகள் பெற்றாள் அவள் யார்? | 94 | சோளப்பொத்தி |
95 | மரத்திற்கு மேலே பழம், பழத்திற்கு மேலே மரம் அது என்ன? | 95 | அன்னாசிப்பழம் |
96 | ஊசி நுழையாத கிணற்றிலே ஒரு படி தண்ணீர்? | 96 | தேங்காய் |
97 | நாளெல்லாம் நடந்தாலும் நாற்பதடி செல்லாது அந்த நாயகனுக்கோ உடல் மேல் கவசம் அது என்ன? | 97 | நத்தை |
98 | ஏரியில் இல்லாத நீர்,தாகத்திற்கு உதவாத நீர், தண்ணீர் அல்ல அது என்ன? | 98 | கண்ணீர் |
99 | கண்ணீர் விட்டு வெளிச்சம் தருவாள் அவள் யார்? | 99 | மெழுகுத்திரிவத்தி |
100 | தலைக்குள் கண் வைத்திருப்பவன் இவன் மட்டும்தான் அவன் யார்? | 100 | நுங்கு |
101 | ஓர் அரண்மனையில் முப்பத்திரெண்டு காவலர்கள் அது என்ன? | 101 | பற்கள் |
102 | ஆழக் குழி தோண்டி அதிலே ஒரு முட்டையிட்டு அண்ணாந்து பார்த்தால் தொண்ணூறு முட்டை | 102 | தென்னை மரம் |
103 | அம்மா சேலையை மடிக்க முடியாது, அப்பா காசை எண்ண முடியாது. | 103 | வானம் நட்சத்திரம் |
104 | வெள்ளிக் கிண்ணத்தில் தங்க காசு | 104 | முட்டை |
105 | குண்டுச்சட்டியில குதிரை ஓட்டறான். | 105 | ஆட்டுக்கல் |
106 | வெள்ளி ஓடையில கருப்பு மீனு துள்ளி விளையாடுது. | 106 | கண் |
107 | டாக்டர் வந்தாரு, ஊசி போட்டாரு, காசு வாங்காமல் போனாரு. | 107 | கொசு |
108 | மழையில் பூக்கும் பூ | 108 | குடை |
109 | ஊரெல்லாம் சுத்துவான், ஆனால் வீட்டிற்குள் வரமாட்டான். | 109 | செருப்பு |
110 | ஒரு குகை, 32 வீரர்கள் , ஒரு நாகம் | 110 | வாய் |
111 | வெள்ளிக் கிணத்துல தண்ணி | 111 | தேங்காய் |
112 | முத்து வீட்டுக்குள்ளே தட்டுப் பலகை அது என்ன? | 112 | நாக்கு |
113 | அழுவேன்,சிரிப்பேன் அனைத்தும் செய்வேன் நான் யார்? | 113 | முகம் பார்க்கும் கண்ணாடி |
114 | கடல் நீரில் வளர்ந்து,மழை நீரில் மடிவது என்ன? | 114 | உப்பு |
115 | வெளிச்சத்தில் பிடிபட்டவனுக்கு இருட்டில் விடுதலை அவன் யார்? | 115 | போட்டோ |
116 | விரல் இல்லாமலே ஒரு கை. அது என்ன? | 116 | உலக்கை |
117 | குரல் இல்லாதவன் கூப்பிடுகிறான் அவன் யார்? | 117 | தொலைபேசி |
118 | அம்மா சப்பை, மகள் உருண்டை அது என்ன? | 118 | அம்மி, குழவி |
119 | தாய் குப்பையிலே, மகள் சந்தையிலே அவை என்ன? | 119 | நெல் |
120 | நனைந்தாலும் நடுங்க மாட்டான் அவன் யார்? | 120 | குடை |
121 | பார்க்க முடியும் நூல்,தைக்க முடியா நூல், அது என்ன நூல்? | 121 | சிலந்தி வலை |
122 | கண்ணும் காதும் ஒன்றாவான்; கழுத்தும் தலையும் ஒன்றாவான். அவன் யார்? | 122 | பாம்பு |
123 | நான்கு கால்கள் உள்ளவன்; இரண்டு கைகள் உள்ளவன். உட்கார்ந்து கொண்டிருப்பான்; உட்கார இடம் கொடுப்பான். அவன் யார்? | 123 | நாற்காலி |
124 | தண்ணீரில் பிறப்பான்; தண்ணீரில் இறப்பான். அவன் யார்? | 124 | உப்பு |
125 | பஞ்சு மெத்தை மஞ்சம் போட்டு வச்சிருக்கு; படுத்துத் தூங்கத்தான் ஆளில்லாமல் இருக்கு. அது என்ன? | 125 | மேகம் |
126 | தண்ணீர் கடல் மேலே தாம்பாளத் தட்டு மிதக்குது. அது என்ன? | 126 | நிலா |
127 | மரத்தின் மேலே தொங்குது மலைப் பாம்பல்ல. அது என்ன? | 127 | விழுது |
128 | நீரில் நனைத்தாலும் நீளம், அகலம் குறையாது. அது என்ன? | 128 | துணி |
129 | முத்தான முத்துகள் முற்றத்திலே காயுது; படி போட்டு அளக்கத்தான் ஆளில்லை. அது என்ன? | 129 | நட்சத்திரங்கள் |
130 | பழுத்திருக்கும் பழமாம்; யாரும் பறிக்காத பழமாம். அது என்ன? | 130 | நிலா |
131 | அரசன் ஆளாத கோட்டைக்கு பகல் காவல்காரன் ஒருவன்; இரவுக் காவல்காரன் ஒருவன். அவர்கள் யார்? | 131 | சூரியன், சந்திரன். |
132 | பேச்சுக் கேட்குது பேசுபவர் தெரியவில்லை. அது என்ன? | 132 | வானொலிப் பெட்டி |
133 | உடைப்பு இல்லா ஏரியில் உள்ள தண்ணீர் ஒழுகுது. அது என்ன? | 133 | மழை |
134 | வெள்ளத்தில் போகாது; வெந்தணலில் வேகாது. கொள்ளையடிக்க முடியாது; கொடுத்தாலும் குறையாது. அது என்ன? | 134 | கல்வி |
135 | குடிக்காத தண்ணீர் குடத்துக்குள்ளே கிடக்குது. அது என்ன? | 135 | தேங்காய் |
136 | நான் பார்த்தால் அவன் பார்ப்பான்; நான் சிரித்தால் அவன் சிரிப்பான். அவன் யார்? | 136 | முகம் பார்க்கும் கண்ணாடி |
137 | ஓலை வீட்டில் குடியிருப்பாள்; உண்ணாமல் தவமிருப்பாள். வாடகையும் தரமாட்டாள்; வீட்டைக் காலியும் செய்ய மாட்டாள். அவள் யார்? | 137 | ஓலைச் சுவடியில் செய்யுள் |
138 | வாயில்லாத குருவி வண்ண இசை பாடுது. அது என்ன? | 138 | வீணை |
139 | பொன்னு விளையும் பூமி. அது என்ன? | 139 | தங்கச்சுரங்கம் |
140 | தட்டு நிறைய லட்டு; தாய் திண்ண முடியலே. அது என்ன? | 140 | முட்டை மேல் அடைகாக்கும் கோழி |
141 | சின்னத் தம்பிக்கு தொப்பியே வினை? அது என்ன? | 141 | தீக்குச்சி |
142 | தலை மட்டும் கொண்ட சிறகில்லாத பறவை தேசமெல்லாம் சுத்தும்? | 142 | தபால் தலை |
143 | உலகமெங்கும் படுக்கை விரித்தும் உறங்காமல் அலைகிறான். அவன் யார்? | 143 | கடல் அலை |
144 | காற்று வீசும் அழகான மரம் அது என்ன? | 144 | சாமரம் |
145 | கட்டிய சேலையை அவிழ்க்க நினைத்தால் கண்ணீரும் கம்பலையும்தான். | 145 | வெங்காயம் |
146 | எப்போதும் காதருகில் ரகசியம் பேசிக் கொண்டிருப்பவள்? | 146 | செல்பேசி |
147 | உணவை எடுப்பான் ஆனால் உண்ணமாட்டான் அவன் யார்? | 147 | அகப்பை |
148 | ஒற்றை கிண்ணத்துக்குள் இரட்டைத் தைலங்கள் அவை எவை? | 148 | முட்டை. |
149 | ஒட்டியவன் ஒருத்தன், பிரித்தவன் இன்னொருவன். அது என்ன? | 149 | கடிதம் |
150 | வெள்ளத்தில் போகாது, வெந்தணலில் வேகாது. கொள்ளையடிக்க முடியாது, கொடுத்தாலும் குறையாது. அது என்ன? | 150 | கல்வி |
151 | பொட்டுப்போல் இலை இருக்கும், பொரிபோல் பூப் பூக்கும், தின்னக்காய் காய்க்கும், தின்னாப் பழம் பழுக்கும் அது என்ன? | 151 | முருங்கைமரம் |
152 | தண்ணீரில் பிறப்பான்; தண்ணீரில் இறப்பான். அவன் யார்? | 152 | உப்பு |
153 | குண்டு குள்ளனுக்கு குடுமி நிமிர்ந்தே இருக்கும் அவன் யார்? | 153 | கத்தரிக்காய் |
154 | காற்று நுழைந்ததும் கானம் பாடுகிறான். அவன் யார்? | 154 | புல்லாங்குழல். |
155 | ஓட்டம் நின்றால் போதும் ஆட்டம் நின்று போகும். அது என்ன? | 155 | ரத்தம் |
156 | தனித்து உண்ணமுடியாது என்றாலும் இது சேர்த்தால்தான் உணவுக்கு சுவை. அது என்ன? | 156 | உப்பு |
157 | வெட்டிக்கொள்வான் ஆனாலும் ஒட்டிக்கொள்வான் அவன் யார்? | 157 | கத்தரிக்கோல் |
158 | ஓடியாடி வேலை செய்தபின் மூலையில் ஒதுங்கிக்கிடப்பாள் அவள் யார்? | 158 | துடைப்பம்/தும்புத்தடி |
159 | ஏற்றி வைத்து அணைத்தால் எரியும் வரை மணக்கும் அது என்ன? | 159 | ஊதுபத்தி |
160 | மூன்றெழுத்துப் பெயராகும். முற்றும் வெள்ளை நிறமாகும் அது என்ன? | 160 | பஞ்சு |
161 | தொட்டால் மணக்கும், சுவைத்தால் புளிக்கும். அது என்ன? | 161 | எலுமிச்சம்பழம் தேசிக்காய் |
162 | எவர் கையிலும் சிக்காத கல் எங்கும் விற்காத கல், அது என்ன? | 162 | விக்கல் |
163 | அகத்தில் அகம் சிறந்த அகம். அது என்ன அகம் ? | 163 | புத்தகம் |
164 | வானத்துக்கும் பூமிக்கும் ஒரே கம்பி அது என்ன ? | 164 | மழை |
165 | குட்டைப் பெண்ணுக்குப் பட்டுப் புடவை. அது என்ன ? | 165 | வெங்காயம் |
166 | ஆயிரம் தச்சர் கூடி அழகான மண்டபம் கட்டி ஒருவன் கண்பட்டு உடைந்ததாம் மண்டபம். அது என்ன ? | 166 | தேன்கூடு |
167 | சிவப்பு பைக்குள் சில்லறை கொட்டிக் கிடக்குது? அது என்ன? | 167 | காய்ந்த சிவப்பு மிளகாய் |
168 | ஆயிரம் தச்சர் கூடி, அழகான மண்டபம் கட்டி, ஒருவன் கண்பட்டு, உடைந்ததாம் மண்டபம். அது என்ன? | 168 | தேன்கூடு |
169 | பிறக்கும்போது வால் உண்டு இறக்கும்போது வால் இல்லை அது என்ன? | 169 | தவளை |
170 | எங்க வீட்டு கிணத்துல வெள்ளி கிண்ணம், மிதக்குது, அது என்ன? | 170 | நிலா |
171 | ஆயிரம் தச்சர் கூடி அமைந்த மண்டபம், ஒருவர் கண்பட்டு உடைந்தது, அது என்ன? | 171 | தேன் கூடு |
172 | கருப்பு சட்டை காரன் காவலுக்கு கெட்டிகாரன் அது என்ன? | 172 | பூட்டு |
173 | கெணத்த சுத்தி அகத்தி கீரை அது என்ன? | 173 | கண் |
174 | இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது அது என்ன? | 174 | பட்டாசு |
175 | இதை சமைக்கும் முன் வெளியெ இருப்பதை எறிந்துவிடுவோம், சமைத்து வெளி இருப்பதை சாப்பிட்டு உள் இருப்பதை எறிந்துவிடுவோம். அது என்ன? | 175 | பலாப்பழம், மக்கா சோளம். |
176 | செய்வதைச் செய்வான்; சொன்னதைச் செய்யான். அவன் யார்? | 176 | கண்ணாடி |
177 | பட்டணத்தில் இருந்து இரண்டு சிறாய் கொண்டு வந்தேன்; ஒன்று எரியுது; இன்னொன்று புகையுது. அது என்ன? | 177 | கற்பூரம்,சாம்பிராணி |
178 | உயிர் இல்லாத நீதிபதி ஒழுங்காக நியாயம் சொல்வார் அது என்ன? | 178 | தராசு |
179 | படுத்துத் தூங்கினால் கண்முன் ஆடும்; அடுத்து விழித்தால் மறைந்தே ஓடும். அது என்ன? | 179 | கனவு |
180 | கால் இல்லை; ஓட்டம் உண்டு, மூச்சு இல்லை; காற்று உண்டு. அது என்ன? | 180 | பந்து |
181 | பிறக்கும் போது வால் உண்டு;இறக்கும் போது வால் இல்லை. அது என்ன? | 181 | தவளை |
182 | இலையுண்டு; கிளையில்லை,பூ உண்டு; மணமில்லை,காய் உண்டு; விதையில்லை,பட்டை உண்டு, கட்டை இல்லை,கன்று உண்டு; பசு இல்லை அது என்ன? | 182 | வாழை |
183 | அதட்டுவான்; அலறுவான் ஆனால் கோட்டையை விட்டு வரமாட்டான். அவன் யார்? | 183 | நாக்கு |
184 | விடிந்தவுடனே வேலையில் இறங்குவான்; வேலை இல்லையேல் மூலையில் கிடப்பான். அவன் யார்? | 184 | விளக்குமாறு |
185 | தான் இருந்தால் பிறரை இருக்கவிட மாட்டான். அவன் யார்? | 185 | ஓட்டை |
186 | தன் மேனி முழுதும் கண்ணுடையாள்; தன்னிடம் சிக்கியபேரைச் சீரழிப்பாள். அவள் யார்? | 186 | மீன் வலை |
187 | வீட்டிலே இருக்கிற அண்டாவுக்கு காதும் இல்லை: மூடியும் இல்லை. அது என்ன ? | 187 | கிணறு |
188 | முதலெழுத்தில் கவிதை முதலிரண்டால் உலகம் மொத்தத்தின் இடை மெலிந்தாலும் முதலும் கடைசியும் சேர்ந்தாலும் தையல், கண்ணிலும் உண்டு | 188 | பார்வை |
189 | வாலும் தலையும் ஒன்று உடல் ரங்கூனில் உண்டு ஸ்ரீ ரங்கத்திலும் உண்டு ஆனால் தில்லையில் இல்லை குத்தூசியில் தலை உண்டு மத்தியில் இல்லை மொத்தத்தில் மாதம் தவிர்த்தக் கவிதை இது என்ன? | 189 | குரங்கு |
190 | இதற்கு கையுண்டு பெயரிலும் கையுண்டு மொத்தத்தில் சூரியத்தலை சேர்த்த பெண்கள் உடை | 190 | இரவிக்கை |
191 | முதலெழுத்து தமிழின் அடுத்த எழுத்து கடை மூன்று சேர்ந்தால் ஒரு எண்ணிக்கை மொத்தத்தில் இது வருமுன் எச்சரிக்கைத் தேவை | 191 | ஆபத்து |
192 | முதலிரண்டில் காட்சி, முதல் மூன்றால் பெயர் விளித்தல் கடை இரண்டில் தலையெழுத்து மாறிய சோதிடம் மொத்தத்தில் பிரதிபலிக்கும் | 192 | கண்ணாடி |
193 | முதல் இரண்டை இழந்தால் ஒளி இல்லை. கடை இரண்டை ஐந்தறிவு ஜீவனுக்கு கட்டுவது யார்? இரண்டும் மூன்றும் திரும்பினால் கடைசியில் நாமும் அதுவே. முதலும் கடையும் சேர்ந்தால் கை இழந்த பெண். மொத்தத்தில் அழகிய பெயராகவும் இருக்கும் நான் யார்? | 193 | கண்மணி |
194 | முதல் இரண்டு பொது இடங்களில் தடை. இரண்டு யாவர்க்கும் இரண்டு. இரண்டு நீங்கின் சற்றே ஓசை மாறிய மொருமொரு தின்பண்டம். சிறுவர்களுக்கு மிக பிடிக்கும். மொத்தத்தில் நினைவுகளாய் இருக்கும் இது என்ன? | 194 | புகைப்படம் |
195 | முதலோடு கடை சேர்ந்தால் மேல் பகுதி. முதலோடு மூன்றை சேர்த்தால் செல்வம். இச்செல்வம் கொண்டு கடை மூன்றை ஓட்டவும் செய்யலாம். | 195 | மாட்டு வண்டி |
196 | முதலோடு நான்கும் மூன்றும் சேரின் நாவில் எச்சில் ஊறும் பிஞ்சு காய். மொத்தத்தில் இது இல்லாத கிராமம் இல்லை. அது என்ன? | 196 | மாட்டு வண்டி |
197 | ஐந்தில் நான்காவது நீங்கின் புதியது. முதல் மூன்றோடு மதம் சேரின் மற்றுமொரு மதம். மூன்றும் நான்கும் பொருள் தராது. இரண்டும் இரட்டை கிளவியானால் தீப்பொறி பறக்கும்; எரியாது. கையிலே பிடித்தால் சுடாது. அது என்ன ? | 197 | மின்மினி பூச்சி |
198 | வெள்ளைக் கத்திரிக்காய், கள்ளக் கூச்சல் போடுது அது என்ன ? | 198 | சங்கு |
199 | கொதிக்கும் கிணற்றில் குதிப்பானாம்; கூச்சல் இல்லாமல் குளிப்பானாம். அவன் யார்? | 199 | அகப்பை அல்லது கரண்டி |
200 | கத்திபோல் இலை இருக்கும் கவரிமான் பூப்பூக்கும்; தின்னப்பழம் பழுக்கும், தின்னாத காய் காய்க்கும். அது என்ன? | 200 | வேப்பமரம் |
201 | செக்கச் சிவந்திருப்பாள்; செவ்வாழை போல் இருப்பாள்; வாலும் முளைத்திருப்பாள்; வந்திருப்பாள் சந்தையிலே. அவள் யார்? | 201 | மிளகாய் |
202 | பாலாற்றின் நடுவே கறுப்பு மீன் தெரியுது அது என்ன? | 202 | கண்கள் |
203 | அழகான பெண்ணுக்கு அதிசயமான வியாதி. பாதிநாள் குறைவாள்; பாதிநாள் வளர்வாள். அது என்ன? | 203 | நிலா |
204 | ஆலமரம் தூங்க; அவனியெல்லாம் தூங்க; சீரங்கம் தூங்க; திருப்பாற்கடல் தூங்க; ஒருவன் மட்டும் தூங்கவில்லை. அவன் யார்? | 204 | மூச்சு |
205 | ஒல்லியான மனிதன்; ஒரே காது மனிதன்; அவன் காது போனால்; ஏது பயன்? அவன் யார்? | 205 | தையல் ஊசி |
206 | முதலின்றி அழகி, நடுவின்றி அரை, கடையின்றி வெறுஞ்சொல், கவிதை சொன்ன இவர் யார்? | 206 | பாரதி |
207 | முதலின்றி போதை, நடுவின்றி வெடிக்கும், கடையின்றி வெறுஞ்சொல், மொத்தமான இந்தச்சுமை என்ன? | 207 | பாரம் |
208 | முதலிழந்தால் ஓடும், முதலிரண்டு இன்றி தீம்புகை, இரண்டோடு கடை சேரின் போதையாம், நான்கில் நளினம் காட்டும் இது என்ன? | 208 | பரதம் |
209 | நடுவழிய ஓய்வுக்காம், கடையிரண்டில் ஏதுமில்லை சொல், மூன்றெழுத்தில் உடுத்தலாம், மொத்தத்தில் பெண்கள் விருப்பம், அது என்ன? | 209 | பட்டு |
210 | கடை மூன்றில் தண்நிழலும், கடையிரண்டால் போதை வரும், முதலிரண்டு ஓய்விற்க்காகும், முதலோடு கடை சேரின் வெடிக்கும், முதலோடு கடையிரண்டு சுமையாம், மொத்தமாய் என்னவென்று சொல்லுங்க? | 210 | பாய்மரம் |
211 | கடையெழுத்து மாறிடில் தின்னலாம், முதலும் கடையும் சேர்ந்தால் குளிரும், மொத்தத்தில் முருகன் இடம், தெரிந்தவர் சொல்லுங்கள் இங்கே? | 211 | பழனி |
212 | மொத்தத்தில் இரண்டு வார்த்தை, மொத்தமாய் அழகணி முதலெழுத்தோடு கடை சேர வல்லின மார்கழிக்குளுமை முதலும் நான்கைந்தும் இருகைகளில் | 212 | பணி(பனி) |
213 | கடைசி வார்த்தையில் மானம் உண்டு, முதல் வார்த்தையின் மென்மைக்காக இறந்தன பூச்சிகள் காஞ்சியில். நான் யார்? | 213 | பட்டுத்துணி |
214 | முதலும் கடையும் சேர்ந்தால் விநாயக விருப்பம், முதலோடு கடையிரண்டு சேர்ந்தால் ஓசை மாறிய பெருங்காற்று, முதலோடு மூன்று சேர அறுசுவைக்குள் ஒன்று, இரண்டு வார்த்தையாக்கினால், முதல் வார்த்தையில் முக்கியமானவர், இரண்டாம் வார்த்தை பாம்பெதிரி, மொத்தத்தில் அழகுப் பறவை, நான் யார்? | 214 | புள்ளிமயில் |
215 | முதலோடு கடை சேரினும், அன்றில் கடையிரண்டும், குன்றின் அடுத்த வடிவம், முதல் நான்கின் கடையில் புள்ளியிழந்த நிலவகை, நடுவோடு கடை சேர கழுத்துக்கு மேல் போகும், மொத்தத்தில் முருகனிடம் சரணடைவோம்! | 215 | மருதமலை |
216 | கடையிரண்டால் குழந்தை வெறுப்பு, சிலதை திங்கலாம், முதலிரண்டு ஓசை மாறிய திருவிழா, மொத்தமாய் புரியாமல் இருக்கும் நான்யார்? | 216 | விளங்காய் |
217 | முதலோடுகடை சேர்ந்தால் "தா", கடை இரண்டால் ஏற்றம், நடுவிலே பலவும் திணிக்கலாம், மொத்தத்தில் கோழிக்கு பிடித்த இடம், அது என்ன? | 217 | குப்பைமேடு |
218 | இது வந்தால் பேச்சுக் குறையும், முதலிரண்டின் தூய்மை முக்கியம், கடையிரண்டால் அழுகை வரும், முதலும் கடையும் சேர்ந்தால் ஆடு கோழிக்கு ஆபத்து முதலெழுத்தில் கால் சேர்த்து அடுத்ததோடு சேர்த்தால் தேநீர்க்கு உதவும், அது என்ன? | 218 | பல்வலி |
219 | பறிக்கப் பறிக்க பெரிதாகும்! - அது என்ன? | 219 | குழி |
220 | ஒரு கிணற்றில் ஓரே தவளை! - அது என்ன? | 220 | நாக்கு |
221 | ஒன்பது பிள்ளைக்கு ஒரே ஒரு குடுமி அது என்ன? | 221 | பூண்டு |
222 | கொத்தரோ,தச்சரோ,கட்டாத கோபுரம் சின்னதாய் இருக்கும் சித்திரக்கோபுரம் அது என்ன? | 222 | கறையான் புற்று |
223 | அள்ள முடியும்; ஆனால் கிள்ள முடியாது - அது என்ன? | 223 | தண்ணீர் |
224 | அள்ளவும் முடியாது; கிள்ளவும் முடியாது - அது என்ன? | 224 | காற்று |
225 | ஏழை படுக்கும் பாய்; எடுத்துச் சுருட்ட ஆள் இல்லை? - அது என்ன? | 225 | |
226 | பொழுது சாய்ந்தால் பூந்தோட்டம்; விடிந்து பார்த்தால் வெறுந் தோட்டம்... - அது என்ன? | 226 | நட்சத்திரங்கள் / வானம் |
227 | தாளைக் கொடுத்தால் தின்னும்; தண்ணீர் குடித்தால் மடியும். - அது என்ன? | 227 | நெருப்பு |
228 | பக்கத்திலுள்ள பட்டணத்தைப் பார்க்க முடியவில்லை. - அது என்ன? | 228 | முதுகு |
229 | நூல் நூற்கும்; இராட்டை அல்ல, வலை பின்னும்; தறியும் அல்ல - அது எது? | 229 | சிலந்தி |
230 | வட்டக் குளத்திலே மீன் வந்து மேயுது; ஈட்டியாலே குத்தி எடுத்து வாயில் போடு! - அது என்ன? | 230 | வடை |
231 | காட்டுக்குப் போனேன்; இரண்டு விறகு கொண்டு வந்தேன்; பகலிலே ஒன்று, இரவிலே ஒன்று எரித்தேன். - அது என்ன? | 231 | சூரியன் சந்திரன் |
232 | மணி அடித்தால் மலைப்பாம்பு நகரும். - அது என்ன? | 232 | இரயில் |
233 | சுருக்கென்று குத்தும் முள்; பொறுக்க முடியாது - அது என்ன? | 233 | தேள் |
234 | மாவிலே பழுத்த பழம்; மக்கள் விரும்பும் பழம். அது என்ன? | 234 | அப்பளம் |
235 | குண்டோதரன் வயிற்றிலே, குள்ளன் நுழைகிறான். - அவன் யார்? | 235 | பூட்டும் சாவியும் |
236 | கண் சிமிட்டும் ஒன்று; மணி அடிக்கும் மற்றொன்று; கண்ணீர் வடிக்கும் இன்னொன்று. - அது என்ன? | 236 | மின்னல், இடி, மழை |
237 | பார்த்ததோ இரண்டு பேர், எடுத்ததோ பத்துப் பேர், ருசி பார்த்ததோ ஒருத்தன். - அவன் யார்? | 237 | கண்கள், கைவிரல்கள். நாக்கு |
238 | காகிதத்தை கண்டால் கண்ணீர் விடுவாள்; முக்காடு போட்டால் சொக்காயில் தொங்குவாள். - அவள் யார்? | 238 | பேனா |
239 | மூட்டை தூக்கி முத்தையன் நத்தையல்ல; தண்ணீரில் இருக்கும் தத்தையன் தவளையல்ல. - அவன் யார்? | 239 | ஆமை |
240 | சுருங்கினால் எனக்கு அவன் அடக்கம்; விரிந்தால் நான் அவனுக்கு அடக்கம். - அவன் யார்? | 240 | குடை |
241 | கால் உண்டு; நடக்க மாட்டான். முதுகு உண்டு; வளைக்க மாட்டான். கை உண்டு; மடக்க மாட்டான். - அவன் யார்? | 241 | நாற்காலி |
242 | இதயம் போல் துடிப்பிருக்கும்; இரவு பகல் விழித்திருக்கும். - அது என்ன? | 242 | கடிகாரம் |
243 | கன்னங்கரிய அரங்கத்தில் வெள்ளைப்பந்து விளையாடும். - அது என்ன? | 243 | கரும்பலகையும் சாக்பிஸ்ஸும் |
244 | எத்தனை தடவை திறந்து முடினாலும் சின்னச் சத்தம் கூட தராத கதவுகள். - அது என்ன? | 244 | கண் |
245 | கையில்லாமல் நீந்துவான்; கால் இல்லாமல் ஓடுவான். - அவன் யார்? | 245 | படகு, கப்பல் |
246 | ஓகோ மரத்திலே, உச்சாணிக் கிளையிலே, ஓட்டுச் சட்டியிலே களிமண் இருக்கிறது. - அது என்ன? | 246 | விளாம்பழம் |
247 | ஒரு ஊருக்கு ஐந்து வழி - அது என்ன? | 247 | உள்ளங்கை |
248 | காட்டுக்குள்ளே நெல் விதைத்தேன்; காக்காய்ம் தின்னவில்லை; குருவியும் தின்னவில்லை - அது என்ன? | 248 | உப்பு |
249 | இத்தனூண்டு சித்தாளுக்கு, ஏழு சுற்றுக் கண்டாங்கி - அது யார்? | 249 | வெங்காயம் |
250 | உப்பை உண்டவன் உறங்காமல் அலைகிறான் - அவன் யார்? | 250 | கடல் |
251 | நூல் இல்லை; ஊசி உண்டு; வாயில்லை; பாட்டுப்பாடும் - அது என்ன? | 251 | கிராமபோன் |
252 | மரத்திற்கு மரம் தாவுவான்; குரங்கு அல்ல. பட்டை அடித்திருப்பான்; சாமியாரல்லன். - அவன் யார்? | 252 | அணில் |
253 | பார்ப்பதற்கு ஐந்து கால்; எண்ணுவதற்கு நான்கு கால் - அது யார்? | 253 | யானை |
254 | முத்து முத்துத் தோரணம்; தரையில் விழுந்து ஓடுது - அது என்ன? | 254 | மழை |
255 | கழுத்துண்டு; கையில்லை. நாக்குண்டு; பேச்சில்லை. வாயுண்டு; அசைவில்லை. தொப்பியுண்டு; தலைமயிர் இல்லை. - அது என்ன? | 255 | மை விட்டு எழுதும் பேனா |
256 | அப்பன் சொறியன்; ஆத்தாள் சடைச்சி; அண்ணன் முழியன்; நானோ சக்கரைக்கட்டி. - அது என்ன? | 256 | பலாப் பழம் |
257 | கோயிலுக்குப் போனேன்; கும்பிடு போட்டேன். பூவில்லாத இலையைப் போற்றி வைத்தேன். பழுக்காத காயைப் பணிந்து வைத்தேன். விதையில்லாக் கணியை வேண்டி வைத்தேன் - அவர்கள் யார்? | 257 | வெற்றிலை, தேங்காய், வாழைப்பழம் |
258 | நெற்றியிலே கண்ணுடையான் கருப்பண்ணன். நெருப்பைத் திண்பான்; நீரும் குடிப்பான் - அவன் யார்? | 258 | இரயில் |
259 | ஓடையில் ஓடாத நீர், ஒருவரும் குடிக்காத நீர் - அது என்ன? | 259 | கண்ணீர் |
260 | ஆயிரம் குழந்தைகட்டு, அரைஞாண் ஒன்று - அது என்ன? | 260 | துடைப்பம் |
261 | பாத்தி சிறு பாத்தி; பாய்வது கரு நீர்; வேரோ வெள்ளை வேர்; பூவோ செம்பூ - அது என்ன? | 261 | விளக்கு |
262 | வளைக்க முடியும்; ஒடிக்க முடியாது - அது என்ன? | 262 | தலைமுடி |
263 | கறுப்புப் பாறையில் வெள்ளைப் பிறை - அது என்ன? | 263 | யானை |
264 | வெள்ளை மாடு; வாலால் குடிக்குது - அது என்ன? | 264 | விளக்குத்திரி |
265 | உதைத்தாலும் அடித்தாலும், ஒன்றாக இருக்கும் - அது என்ன? | 265 | தண்ணீர் |
266 | பச்சைப் பெட்டியில் பத்துச் சரம்; எடுத்துப் பார்க்கலாம் - ஆனால் தொடுத்துப் போட முடியாது - அது என்ன? | 266 | வெண்டைக்காய் |
267 | நாலு மூலைச் சதுரப் பெட்டி - அதன் மேலே ஒடுமாம் குதிரைக் குட்டி! அது என்ன? | 267 | அம்மியும் அரைக்கும் கல்லும்/குழவியும் |
268 | நாலு உலக்கை குத்திவர, இரண்டு முறம் புடைத்து வர, துடுப்புத் துளாவி வர, துரை மக்கள் ஏறிவர. - அது என்ன? | 268 | யானை |
269 | இந்தப் பிள்ளை பெரியவனானால், படிக்காமலே பலன் தருவான்! - அவன் யார்? | 269 | தென்னம்பிள்ளை |
270 | உயிர் இல்லாப் பறவை; உலகைச் சுற்றி வருது! - அது என்ன? | 270 | ஆகாய விமானம் |
271 | இருந்தாலும், பறந்தாலும், இறந்தாலும் இறக்கை மடக்காத பறவை - அது என்ன பறவை? | 271 | தட்டான் பூச்சி |
272 | நீலக்கடலிலே பஞ்சு மிதக்குது. - அது என்ன? | 272 | நீல வானின் மேகம் |
273 | எட்டாத தூரத்தில் தொட்டில் கட்டி ஆடுது! - அது என்ன? | 273 | தூக்கணாங்குருவிக்கூடு |
274 | ஒரு அகப்பை மாவாலே, ஊரெல்லாம் கல்யாணம்! - அது என்ன? | 274 | |
275 | ஆழக் குழி தோண்டி, அதில் ஒரு முட்டையிட்டு, அண்ணாந்து பார்த்தால் தொண்ணூறு முட்டை. - அது என்ன? | 275 | தென்னை மரம் |
276 | கட கடா குடு குடு; நடுவிலே பள்ளம். - அது என்ன? | 276 | ஆட்டுக்கல் |
277 | இட்டேன்; எடுக்க முடியவில்லை. பூசினேன்; பிடமுடியவில்லை. - அது என்ன? | 277 | கோலம் |
278 | காய்த்த மரத்திலே கல் எடுத்துப் போட்டால், காவல்காரப் பையன் கோபப்பட்டு வருவான். - அவன் யார்? | 278 | தேனீ |
279 | நாலு மூலை நாடகசாலை; நடுவிலிருக்கும் பாடகசாலை; ஆடும் பெண்கள் பதினாறு; ஆட்டி வைப்பவர் இரண்டுபேர். - அது என்ன? | 279 | தாயம் விளையாட்டு |
280 | பிறக்கும் போது சுருண்டிருப்பாள்; பிறந்த பின்னர் விரிந்திருப்பாள். - அவள் யார்? | 280 | வாழையிலை |
281 | குட்டி போடும்; ஆனால் எட்டப் பறக்கும் - அது என்ன? | 281 | வெளவால் |
282 | தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான் தொட்டால் போது; ஒட்டிக் கொள்வான். - அவன் யார்? | 282 | சிலந்தி வலை |
283 | ஓடிப் படர்வேன்; கொடியல்ல. ஒளிமிக உண்டு; நிலவல்ல. மனைகளை அலங்கரிப்பேன்; மலரும் அல்ல. - அது என்ன? | 283 | மின்சாரம் |
284 | செடியில் விளையாத பஞ்சு; தறியில் நூற்காத நூல்; கையில் தொடாத துணி! - அது என்ன? | 284 | ஒட்டடை |
285 | உச்சியில் குடுமி உண்டு; மனிதனல்லன், உடம்பெல்லாம் உரோமமுண்டு; குரங்குமல்லன், உருண்டை விழி மூன்றுண்டு; சிவனுமல்லன் - அவன் யார்? | 285 | தேங்காய் |
286 | காலும் இல்லை; கையும் இல்லை; காடும் மலையும் நெடுகச் செல்வான். அவன் யார்? | 286 | பாதை |
287 | இரவல் கிடைக்காது; இரவில் கிடைக்கும். - அது என்ன? | 287 | தூக்கம் |
288 | வெள்ளை வயலிலே கறுப்புவிதை. கண்ணால் பார்த்தேன்; கையால் எடுக்க முடியவில்லை! - அது என்ன? | 288 | புத்தகம் |
289 | நெருப்பிலே சுட்ட மனிதனுக்கு நீண்ட நாள் வாழ்வு. - அது யாரு? | 289 | செங்கல் |
290 | பச்சை பாம்பு கல்லைத் தூக்குது! - இது என்ன? | 290 | புடலங்காய் |
291 | மொட்டைத் தாத்தாத் தலையிலே இரட்டைப் பிளவு! - அது யாரு? | 291 | பட்டாணி |
292 | எங்கள் ஆயாள் வீட்டுத் தோட்டத்திலே பத்து வாழை மரங்கள் - அவைகளை ஆட்டினாலும் ஆட்டலாம்; பிடுங்க முடியாது. - அவை என்ன? | 292 | 10 விரல்கள் |
293 | இந்த ஊரிலே அடிபட்டவன்; அடுத்த ஊரிலே போய்ச் சொல்கிறான். - அவன் யார்? | 293 | தபால் |
294 | இரவும் பகலும் ஓய்வில்லை; அவன் படுத்தால் எழுப்ப ஆள் இல்லை. - அவன் யார்? | 294 | இதயம் |
295 | அண்ணன் மத்தளம் கொட்ட, தங்கை விளக்குக் காட்ட, அம்மா தண்ணீர் தெளிக்கிறாள் - அவர்கள் யார்? | 295 | இடி , மின்னல் ,மழை |
296 | அம்மான் வீட்டுத் தோட்டத்திலே, பட்டாக்கத்தி தொங்குது. - அது என்ன? | 296 | அவரைக்காய் |
297 | கிண்ணம் போல் - பூ பூக்கும் கிள்ளி முடிக்க முடியாது... - அது என்ன பூ? | 297 | ஊமத்தம் பூ |
298 | ஒற்றைக்கால் கறுப்பனுக்கு எட்டுக் கை! - அது என்ன? | 298 | குடை |
299 | இதயம் போல் துடிப்பிருக்கும்; இரவு பகல் விழித்திருக்கும்! - அது என்ன? | 299 | குடை |
300 | அடர்ந்த காட்டின் நடுவிலே ஒரு பாதை.... - அது என்ன? | 300 | கடிகாரம் |
301 | ஆற்று மணலை அள்ளித் தின்போம்; நாங்கள் ஒரு சாதி. வெள்ளைக் கல்லை உடைத்துத் தின்போம்; நாங்கள் ஒரு சாதி. ஓணானை போல் உரித்துத் தின்போம்; | 301 | தலையில் முடிகளிடையே உச்சி வகிடு எடுப்பது |
302 | நாங்கள் ஒரு சாதி - இவுங்க யாரு? | 302 | சர்க்கரை, கற்கண்டு, வாழைப்பழம் |
303 | எட்டுக்கால் ஊன்றி; இருகால் படமெடுத்து; வட்டக் குடை பிடித்து வருகிறார் துரை மகனார்........ - இவர் யார்? | 303 | நண்டு |
304 | விரிந்த ஏரியிலே வெள்ளோட்டம் மிதக்குது! - அது என்ன? | 304 | நிலா |
305 | பகலில் துயிலுவான்; இரவில் அலறுவான்......... அவன் யார்? | 305 | ஆந்தை |
306 | மஞ்சள் குருவி நெஞ்சைப் பிளந்து மகாதேவனுக்கு பூசை ஆகுது! - அது என்ன? | 306 | வாழைப்பழம் |
307 | பள்ளிக்கூடம் போகிற பாப்பாவுக்குக் கையிலே ஒரு டை; தலையிலே ஒரு டை. - அது என்ன? | 307 | குடை, சடை |
308 | பரட்டைத்தலை மாமியாருக்குப் பவளம் போல் மருமகள்! - அவள் யார்? | 308 | அத்திப்பழம் |
309 | வெள்ளைக் கொல்லை; கறுப்பு விதை. கை விதைக்கும்; வாய் கொறிக்கும். - அது என்ன? | 309 | கரும்பலகை |
310 | அமைதியான பையன்; அடிக்காமல் அழுவான். அவன் யார்? | 310 | அலாரம் |
311 | இலை இல்லை; பூ இல்லை; கொடி உண்டு. அது என்ன? | 311 | துணி போடும் கொடி |
312 | அதிவேகக் குதிரை, ஆடியபடி செல்லும் குதிரை போட்ட கோட்டைத் தாண்டாமல் ஓடும் அது என்ன? | 312 | இரயில் வண்டி |
313 | எங்வக அம்மா போட்ட சிக்கலை யாராலும் பிரிக்க முடியாது அது என்ன? | 313 | சடை பின்னல் அல்லது இடியப்பம் |
314 | ஒரே வயிற்றில் வாழ்ந்தாலும் ஒரு பிள்ளை ஓடுவான், மற்றவன் நடப்பான். அது என்யன? | 314 | கடிகார முள் |
315 | உருளும் வீட்டைச் சுற்றி கருப்பு வேலி. அது என்ன? | 315 | சாலை |
316 | இவன் வலை பின்னுவான் ஆனால் மீன் பிடிக்க மாட்டான் அவன் யார்? | 316 | சிலந்தி |
7 comments:
ஆஹா சூப்பர் பாராட்டுக்கள் உங்கள் கடும் உழைப்புக்கு
வாழ்கையே ஒரு விடுகதை.
:)
அம்பூட்டையும் படிச்சிட்டேன் பொய் சொல்ல இயலாது
இதை நீங்கள் பகுதிகளாக வெளியிட்டு இருக்கலாம்
நல்ல தொகுப்பு
நல்ல தொகுப்பு
பாராட்டுக்கள் உங்கள் கடும் உழைப்புக்கு
236 . மின்னல், இடி, மழை
super
கடுமையான உழைப்புக்கு பாராட்டுக்கள் தொடருங்கள்
தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in
Post a Comment