மழை

வானவீதி மேகக் கூட்டம்
வழங்கும் நல்ல மழையிது
உலகமெங்கும் உயிர்கள் வாழ
உரிய அமுத நீரிது!
இடிமுழங்கி மின்னல் வெட்டி
இனிது பெய்யும் மழையிது
எத்தனையோ தவளைக் கூட்டம்
இனிது பாடும் மழையிது!
உழவர் மக்கள் உவந்து போற்றி
களித்து நோக்கும் மழையிது
சின்னஞ்சிறிய புல்லைக் கூட
சிறந்து வளர்க்கும் மழையிது!
தட்டான்பூச்சி தரையில் இறங்க
தட்பம் தந்த மழையிதுத
டையிலாது பூஜை நடக்க
தண்ணீர் வழங்கும் மழையிது
குருவிக் கூட்டம் எங்கும் பறந்து
குலவி மகிழும் மழையிது
உலகமெலாம் போற்றி மகிழும்
உன்னதமாம் மழையிது!

1 comments:

காமிக்ஸ் காதலன் said...

புதிய பொலிவுடன், புதிய பகுதிகளுடன் - காமிக்ஸ் காதலனின் பொக்கிஷப் புதையல்


இனி, ஒவ்வொரு வெள்ளியும் - உங்கள் பேவரிட் இணையதளத்தில். படிக்க தவறாதீர்கள்.