குள்ளவாத்தே குள்ளவாத்தே

குள்ளவாத்தே குள்ளவாத்தே
கோவைக்கு வந்த செல்ல வாத்தே
மழை கண்டு இறைதேட வந்தாயோ
ஊரெல்லாம் மழையாம்!
ஆறு, குளமெல்லாம் நீராம்
மீனும் கிடைக்கும்
நண்டும் கிடைக்கும்
வயலில் இறங்கி சேற்றை கலக்கி!
வாடாமலராம் வண்ணமீனை பிடித்தே
வாகாய் தின்னலாம் செல்ல வாத்தே!
ஆற்று வெள்ளத்தில் முதலை வந்தால்
மக்களுக்கு சொல்லு வாத்தே!
ஆபத்தென்றால் தலையை ஆட்டி
எச்சரிப்பாய் செல்லவாத்தே!
குற்றம்பாராமல் சுற்றம் சேர்!
கழனி கண்டால் களிப்படை!
நீர்க்களம் கண்டால் நீந்திவிடு
கழனியும் நீர்க்களமும் கானல் நீரானால்
காலம் சரியில்லை என கண்ணுறங்கு
கனியும் காலத்தை கனவில் காண்!
வாகாய் நீந்தி வசமாய் இறைதேடு
வாழாதிருப்பது மடமை
வாழ்ந்து காட்டுவது நம் கடமை! சோர்வு என்பது நமக்கெதற்கு
சோதனை தந்தவர்க்கு சுகம் எதற்கு?
மனம் எனும் தோணி மதி தரும் ஏணி
குணம் எனும் கேணி குறைதீர்க்கும் தேனீ
செருக்கு எனும் கிறுக்கு சறுக்கிவிடும் சரக்கு
பொறுமை எனும் முறுக்கு மாண்புதரும் மருந்து

0 comments: