பொம்மை

சின்ன சின்ன பொம்மை
சீருடைய பொம்மை
என்னுடைய அம்மா
எனக்குத் தந்த பொம்மை

சட்டையிட்டு, தொப்பியிட்டு
நிற்கும் இந்த பொம்மை
பொட்டு வைத்து பூவும் வைத்து
நிற்கும் இந்த பொம்மை

சாவிகொடுத்தால் சிரிக்கும்
மணியடித்தால் தூங்கும்
நல்ல நல்ல நாட்டியங்கள்
செய்யும் இந்த பொம்மை

அம்மா தந்த பொம்மை
சும்மா தருவேனோ?
சுற்றி சுற்றி வந்தாலுமே
சும்மாக் கிடைக்காது.

0 comments: