சின்ன சின்ன வயசிலே செல்லமான வயசிலே
சொன்ன பேச்சை கேட்க வேண்டும்
அம்மா அப்பா, சொன்ன பேச்சை கேட்க வேண்டும்
காலையிலே எழுந்திருக்க பழக வேண்டும்

கல்வி கற்க பள்ளி கூடம் போக வேண்டும்
நல்ல கருத்துடனே பாடங்களை படிக்க வேண்டும்
எறும்பு போலே துறுதுறுப்பாய் இருக்க வேண்டும்
எதிலையுமே பரபரப்பாய் நடக்க வேண்டும்
துரும்பு போல சமயத்திலே உதவ வேண்டும்.
சூது வாது பொய்களங்கள் மறக்க வேண்டும்
0 comments:
Post a Comment