நாயும் கழுதையும் #அப்பா எப்பவோ சொன்ன குட்டிக் கதைகள்



நாயும் கழுதையும்  #அப்பா எப்பவோ சொன்ன குட்டிக் கதைகள் by Jeeves

" ஏய் ஏய்"

கத்தியது கழுதை. நாய் அதைப் பற்றி எந்த ஒரு சலனும் இல்லாமல் இருந்தது.

" உள்ள யாரோ போறாங்க. நீ குலைச்சு நம்ம முதலாளிய எழுப்பு "

" அது பழக்கப்பட்ட வாசனை தான். நீ ஒண்ணும் கவலப் படவேண்டாம். எனக்குத் தெரியும் எப்ப குலைக்கனும்னு "

" அவன் கைல பாரு எவ்ளோ பெரிய கம்பி வச்சிருக்கான். நம்ம வீட்டை உடைச்சு உள்ள என்னமோ திருடப் போறான்னு நினைக்கிறேன் "

கழுதை இடைவிடாது பொருமியது. நாய் அது பற்றி கொஞ்சமேனும் கவலை இல்லாமல் இருக்கவே கழுதைக்கு கோபம் வந்துவிட்டது

" நீ இப்ப குலைக்கப் போறியா இல்லையா "

" முடியவே முடியாது. உள்ள முதலாளியோட சின்னக் குழந்தை தூங்குது. நான் குலைச்சு குழந்தை எழுந்துட்டா இராத்திரி முழுக்க அழுதுட்டே இருக்கும் பாவம். நான் மாட்டேன்பா "

நாய் சோம்பல் முறித்து வசதியாகப் படுத்துக் கொண்டது.

கழுதைக்கு கோபம் தலைக்கேறியது. உள்ளே நுழைந்த மனிதர் கதவு பக்கம் போகவே தன் எஜமானரை எழுப்ப கழுதை தன் வழக்கமான குரலில் கத்தத் தொடங்கியது. கழுதை போட்ட சத்தத்தினால் குழந்தை எழுந்து அழத்தொடங்கியது

கழுதைக் கத்துவதைக் கேட்டு வெளியே வந்த அந்த வீட்டு எஜமானன் தன் வீட்டுக்கு வந்த அந்த மனிதரை வீட்டுக்குள் அனுப்பி விட்டு நேரம் கெட்ட நேரத்தில் கத்தி எல்லாரையும் எழுப்பியதற்காக கழுதைய நாலு சாத்து சாத்தினார். அவர் உள்ளே போனதும் நாய் சொன்னது

" அவங்க அவங்க தங்களோட வேலை செஞ்சா போதும். மத்தவங்க வேலையில தலையிட்டு குழப்பம் விளைவிச்சா தனக்கே கேடு விளையும்"

1 comments:

நட்புடன் ஜமால் said...

நல்ல பகிர்வுங்க