ஆக்டோபஸ்


பாம்புக் கொத்துப் போலே கடலில்
பாய்ச்சல் காட்டுவேன்
பழுப்புச் சாய மசியைப் பீய்ச்சிப்
பகையை ஓட்டுவேன்!
பவளத் திட்டில் பள்ளம் பறித்துப்
பதுங்கிக் கொள்ளுவேன்
பசிக்கு மீனும் நண்டும் தின்று
பம்மித் துள்ளுவேன்!
நிலை கொள்ளாமல் நீர்க்குள் மேனி
நிறங்கள் மாறுவேன்
நினைத்தால் உடலைத் தட்டையாக்கி
நிலாவில் ஊறுவேன்!
எனக்கு வாழ எட்டுக் கைகள்
எலும்புகள் இல்லை
என்னை உன்னை எண்ணுவோரால்
எத்தனை தொல்லை?
அக்வேரியம் விட்டே வந்தாய்
அருமை ஆக்டோபஸ்
ஆட்கள் தேடி வருவதற்குள்
ஆவாயோ வாபஸ்!

3 comments:

Anonymous said...

ரொம்ப நல்லாருக்கு

கவி அழகன் said...

சிரிப்பு தரும் கவிதை அருமை

கவி அழகன் said...

தனிதமிழ் வளத்தமிழ் கவிதை
வாசிக்க வாசிக்க அருமை