எந்தத் தொழிலைச் செய்யலாம்

டாக்டராக நான் இருந்தால்
நாடித் துடிப்பைப் பார்த்திடுவேன்.
நாக்கை நீட்டு என்றிடுவேன்
நன்றாய் ஊசி போட்டிடுவேன்.

வக்கீலாக நான் இருந்தால்
வழக்கை ஏற்று நடத்திடுவேன்.
நன்றாய் வாதம் புரிந்திடுவேன்
நீதியை நிலையாய் நாட்டிடுவேன்

பொறியாளராய் நான் இருந்தால்
பாங்காய் பாலம் கட்டிடுவேன்.
கட்டிடம் எழுப்பிக் காட்டிடுவேன்
கருத்தாய் ஊரைக் கட்டிடுவேன்.

எந்தத் தொழிலைச் செய்தாலும்
அக்கறை எனது மூலதனம்.
அதனை மனதில் வைத்திடுவேன்
அழகாய் சாதனை படைத்திடுவேன்.

2 comments:

அகமது சுபைர் said...

ஒரிஜினல் பாடலில் நானிருந்தால் என்பது “நானானால்”னு மாற்றப்பட்டிருக்கு. சரிபார்க்கவும்...

வீராங்கன் said...

அழகு...,