வணக்கம் சொல்வோம்


காலை எழுந்து கைகள் குவித்து
சொல்வேன் கடவுள் வணக்கம்

பள்ளி சென்று வகுப்பில் அமர்ந்து
சொல்வேன் காலை வணக்கம்

உணவு உண்டு வகுப்புத் திரும்பி
சொல்வேன் மதிய வணக்கம்

மணி அடிக்கும் நேரம் வகுப்பில்
சொல்வேன் மாலை வணக்கம்

இரவு உறங்கும் முன்னர் வீட்டில்
சொல்வேன் இரவு வணக்கம்.

0 comments: