CBSE Vs. ICSE - ஏன் இவை மெட்ரிக் அல்லது சமச்சீர் கல்வி-யை விட மேலானது



தவிர்க்க முடியாத உள்ளூர் இடப்பெயர்ச்சியின் காரணமாக திருவான்மியூர் சங்கரா-வில் இருந்து எல்.கே.ஜி முடித்த குழந்தையை பள்ளி மாற்ற வேண்டிய கட்டாயம். மெட்ரிகுலேஷன் கல்வி ஓரளவுக்கு தன்மையாக இருந்ததால், ப்ரைமரி முடிக்கும் வரை அதிலேயே இருக்கட்டும், ஆறாம் வகுப்பில் CBSE சேர்த்துக்கலாம் என்று நினைத்திருந்தோம்.

டிசம்பர் முதற்கொண்டு பள்ளி பள்ளியாக ஏறி இறங்கியதில், ஸ்டேட், மெட்ரிக், ஐ.சி.எஸ்.ஈ., சென்ட்ரல், இண்டர்நேஷனல், என்றெல்லாம் பல்வேறு குழப்பங்கள் சராமாரியாகத் தாக்கின. போதாத குறைக்கு, வீடு ரீகன்ஸ்ட்ரக்ட் பண்ணும் பில்டர் வேறு இப்போ அப்போ, அப்ரூவலுக்கு இன்னும் ஏழெட்டு மாசமாகும், அடுத்த வருஷம்தான் என்றெல்லாம் சொல்லிவிட்டு , கடைசியில் ஏப்ரலில் தான் தீர்மானத்துக்கு வந்து முடிந்தது.

ஏப்ரலில் எங்கேயும் அட்மிஷன் கிடைக்காமல், சீட் கிடைத்த மூன்று பள்ளிகளில் எம்பொண்ணை இப்போதிருக்கும் பள்ளியில் (அரசு பள்ளி இல்லை) சேர்க்கக் காரணம்
1. லோகலில் இருந்த பள்ளிகளில் ஜூன் கடைசிவரை ஒன்றாம் வகுப்பு சீட் கிடைக்கவில்லை
2. சீட் கிடைத்த மூன்று ஸ்கூல்களில் இதைத் தவிர இரண்டு ஸ்கூல்களில் எக்ஸ்ட்ரா கரிகுலர் ஆக்டிவிடீஸ் ஏதும் கிடையாது. சாதாரணமான கட்டுரை, பேச்சுப் போட்டிகள் கூட இல்லை.
3. முரட்டு குழந்தையாக இருந்தால் அடித்து திருத்துவார்கள் என்று வாய்மொழியாக அறிவித்தார்கள். எழுதாமல் அல்லது பிலோ ஆவரேஜ் மாணவராக இருந்தால் அரையாண்டு பரீட்சைக்கு அப்புறம் வெளியே அனுப்பி விடுவார்கள். ஒன்றாம் வகுப்பு படிக்கும் குழந்தையை எப்படி இப்படி அசெஸ் செய்ய முடியும்? ஒற்றுமையும் ஒழுக்கமும் பணிவும் வளரத்தானே பள்ளிக்கு அனுப்புகிறோம்!!
4. தற்போதுள்ள பள்ளியில் யூனிபார்ம், புத்தகங்கள், உணவு, ஸ்கூல் பீஸ் எல்லாமே நிதானமாக ஏற்க கூடிய அளவில் இருக்கின்றன. கேபிடேஷன் பீஸ் கிடையாது. பிள்ளைகளை அடிப்பதில்லை. எப்போது வேண்டுமானாலும் டீச்சர்களை பார்க்கும் வசதி, சுதந்திரம். குழந்தை டீச்சர்களிடம் அன்பையும் அன்பால் கட்டுப்படுவதையும் ஏற்று இருக்கிறார்கள் என்பதை கண்கூடாகப் பார்க்கிறேன். அரை மணி நேரத்தில் முடிக்கும் அளவுக்கு மிதமான ஹோம்வொர்க். கை வேலைகள், பாடல், பேச்சுதிறன் வளர்த்தல், எழுத்து போட்டிகள் என்று அடிக்கடி நடத்துகிறார்கள்.

பல பள்ளிகளில் ஹோம்வொர்க் இல்லை, என்றாலும், பிள்ளை எந்தளவு படிக்கிறார்கள் என்பதையறிய ஹோம்வொர்க் கட்டாயம் பெற்றோர்களுக்கு eyeopener. இல்லையென்றால் பரீட்சை நேரத்தில் கடைசி நிமிஷ பிரஷர் தரும்படி ஆகிறது. இந்தப் பள்ளியில் அளவான ஹோம்வொர்க் உண்டு.

சரி, இத்தனை முஸ்தீபுகள் எதற்கு என்றா கேட்கிறீங்க? இதோ.

என்னென்ன நேஷனல் மற்றும் இன்டர்நேஷனல் போர்டு கல்வி முறைகள் தற்போது இந்தியாவில் இருக்கின்றன?
Secondary School Leaving Certificate (SSLC)
Indian Certificate for Secondary Education (ICSE)
Central Board for Secondary Education (CBSE)
National Open School (NOS)
International General Certificate of Secondary Education (IGCSE)
International Baccalaureate (IB)

இதெல்லாம் என்னன்னு தெரிசுக்க வேண்டாமா. போதாத குறைக்கு, மெட்ரிக்கையும் சமச்சீர் ஆக்கி விட்டார்கள். இதைப் பற்றி பலரும் பலவிதமாக பேசிப் பேசித் தீர்த்தாகி விட்டது. இப்போது இதைப் பற்றி பேச வேண்டாம்.

அதென்ன CBSE- இதென்ன ICSE? இரண்டுக்கும் என்ன வித்யாசம்? இவையிரண்டும் என்னன்ன விதத்தில் மெட்ரிக்/சமச்சீர் கல்வி-யை விட மேலானது?

இதெல்லாம் pros/ இதெல்லாம் cons என்றெல்லாம் பிரிக்கவில்லை.

CBSE:தற்கால நடைமுறைக்கு ஏற்ற, குழந்தைக்கும் இலகுவான கல்வி முறை
CBSE:மெடிகல், இன்ஜினீயரிங் போன்ற professional entrance பரீட்சைகளுக்கு ஏற்ற மாதிரியான அறிவூட்டல். ஏனென்றால் IIT-JEE & PMT போன்ற பரீட்சைகளை CBSE பாட அடிப்படையில் தான் நடத்துகிறது. மற்ற கல்வித்திட்டங்களில் படிக்கும் மாணவர்கள் கஷ்டப்பட்டு முற்றிலும் புதியதாய் ஒன்றை கற்றால் மட்டுமே இந்த பரீட்சைகளில் எளிதாக பாஸ் செய்ய முடிகிறது.
CBSE:இந்தியாவுக்குள் எங்கே வேண்டுமானாலும் பணிமாற்றம் ஆகும் வாய்ப்புள்ள பெற்றோர்களின் பிள்ளைகளுக்கு ஏற்றது. (இந்தியா முழுதும் ஒரே மாதிரியான பாடத் திட்டம்)
CBSE:தாய்மொழி மற்றும் ஹிந்தி கற்பது கட்டாயம்
CBSE:ஆங்கிலத்துக்கு முக்கியத்துவம் கொஞ்சம் குறைவு
CBSE:விஞ்ஞானபூர்வமாகப் பிரிக்கப்பட்ட பாடத்திட்டங்கள் - வருடம் முழுதுக்குமாக termகளாக பாடங்கள் பிரிக்கப் பட்டிருக்கும். அந்தந்த term பரீட்சைகளின் weightage அளவீடுகள் final பரிட்சைக்கும் consider செய்யப்படும்.
CBSE:பாடத்திட்டத்தில் thinking skills மற்றும் problem solving skills ஆகிய திறன்களை மேம்படுத்தும் வகையில் பாடத்திட்டங்கள் அமைந்துள்ளன.
CBSE:யில் மாணவர்களுக்கு தேசீய / மாநில அளவில் இன்டோர் மற்றும் அவுட்டோர் விளையாட்டுப் போட்டிகள் நடத்துகின்றனர்.


ICSE: சாதாரணமான படிப்பு மூலமே ஆங்கிலப் புலமை பெறுவது நிச்சயம். ஒன்பதாம் மற்றும் பத்தாம் வகுப்பில் ஷேக்ஸ்பியர் உள்ளடக்கிய இரண்டு பேப்பர்கள் ஆங்கிலத்தில் கட்டாயம் உண்டு.
ICSE: +2விற்குப் பிறகு மேற்கொண்டு மேனேஜ்மென்ட் / காமெர்ஸ் படிப்புக்களுக்கு சிறந்த அடிப்படையாக விளங்குகிறது.
ICSE: பத்தாம் வகுப்புக்கு மேல் கணிதம் மிகவும் கடினமாக இருக்கிறது என்று கருதுகிறார்கள். சயன்ஸ் பாடத்தில் மூன்று பேப்பர்கள், ஆங்கிலத்தில் இரண்டு பேப்பர்கள், சோசியல் ஸ்டடீஸ் பாடத்தில் இரண்டு பேப்பர்கள் என்று விரிவாய் படித்தே ஆகவேண்டும். ஆனால் CBSE:யில் எல்லாமே ஒரு பேப்பர் எழுதினால் போதுமானது.
ICSE:கல்வி முறையில், அடிப்படைக் கல்வி / fundamentals எல்லாமே விஞ்ஞானபூர்வமாய், அறிவியல் ரீதியாய், காரண-அகாரணங்களை தெளிவாய் விளக்கி கல்வியை முழுமையாக கற்கும்படி செய்கிறது. CBSE:யில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவனும் ICSE:யில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவனும் சமநிலை அறிவோடு விளங்குகிறார்கள். அதே போல, ICSE:யில் எட்டாம் வகுப்பில் பயிலும் அதே பாடங்களையே, ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பில் இன்னும் மேம்படுத்தி, விரிவாகவும் விளக்கமாகவும், practical experiments-களோடும் குழந்தைகள் பயில்கின்றனர். இதனால் அவர்களுக்கு அடிப்படை அறிவு மிகுந்து இருக்கின்றது.
ICSE: பிசிக்ஸ், கெமிஸ்ட்ரி மற்றும் பயாலாஜி பாடங்களில் கட்டாயம் practical பரிட்சைகள் உண்டு. இது தவிர சுயமாக செய்யும் அறிவியல் சிந்தனைகளுக்கென்று assignments-கொடுக்கப்பட்டு அதற்கென 20 மார்க்குகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
ICSE:யில் சுற்றுச் சூழல் கல்வி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வேறெந்த கல்வித் திட்டத்திலும் இப்படி இருப்பதாகத் தெரியவில்லை (எனக்கு!).
ICSE:யில் பன்னிரெண்டாம் வகுப்பு சர்டிபிகேட் ஸ்காட்லேண்ட் யுனிவர்சிடியின் சீனியர் எக்ஸாமுக்கு ஒப்பானதாக மதிக்கப்படுகிறது. இதனால், ஒரு வேளை பின்னாளில் மேற்கல்விக்கென யு.கே. / காமன்வெல்த் யுனிவர்சிடிக்களுக்கு அப்ளை செய்யும் போது இந்தக் கல்வி முறையில் பயின்ற மாணவர்களுக்கு சிறப்பு அங்கீகாரம் கிடைக்கிறது.
ICSE:யில் மாணவர்களுக்கு தேசீய அளவில் கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடத்துகின்றனர்.
ICSE:யில் தொழில்சார் கல்விக்கு நிறைய வழிகாட்டுதல்கள் இருக்கின்றன. இதனால், unusual ஆனால் வெற்றிகரமான / அதிகப் பொருளீட்டும் தொழில்கள் பற்றிய அறிவு பெறுகின்றனர்.
ICSE:யில் குழந்தைகள் ஏதேனும் ஒரு பாடம் (subject) அதாவது, சயன்ஸ் அல்லது மேத்ஸ் அல்லது ஹிஸ்டரி ஏதேனும் பிடிக்கவில்லை என்றால், அதை ஆப்ஷனில் விட்டு விட்டு தனக்குப் பிடித்த / விருப்பமான / தன்னால் இயன்ற சப்ஜக்ட் ஒன்றை தேர்ந்தெடுத்து படித்து பரீட்சை எழுதி பாஸ் செய்து கொள்ளலாம்.

சென்னையில் ICSE: கல்வித் திட்டம் உள்ள பள்ளிகள்
ஆஷ்ரம் பள்ளி (கிண்டி)
மயிலாப்பூர் வித்யாமந்திர்
அடையார் கிருஷ்ணமூர்த்தி ஃபவுண்டேஷன் ஸ்கூல்
அடையார் சங்கரா
அடையார் சிஷ்யா
க்ரோவ் ஸ்கூல் தேனாம்பேட்டை
தரமணி அமெரிக்கன் இண்டர்நேஷனல் ஸ்கூல்
மயிலாபூர் YGP ஸ்கூல்
தாம்பரம் குட் எர்த் ஸ்கூல்
பாலவாக்கம் பிரிட்டிஷ் இண்டர்நேஷனல் ஸ்கூல்
பெருங்குடி அபாகஸ் இண்டர்நேஷனல் ஸ்கூல்
வேப்பேரி கோர்ரி கேர்ல்ஸ் ஹை ஸ்கூல்
St.Francis International School, Kolapakkam (Porur)


இதை பற்றி இன்னும் விரிவாகப் பேசலாம். பேசிக் கொண்டே போகலாம். இன்னும் ஏதேனும் விபரம் தெரிந்தாலோ, அல்லது கேள்விகள் இருந்தாலோ கமென்ட் பாக்ஸில் பகிருங்கள். என்னால் இயன்றளவு செய்திகளைச் சேகரித்துத் தருகிறேன்.

Parent's Club Blog-கிலும் பகிர்ந்துள்ளேன்.

4 comments:

Shanmuga Sundaharam said...

தெளிவான விளக்கம் CBSE ல் தான் என் மகள்களை சேருத்துளேன். இந்த அளவு தகவல் தெரியா விட்டாலும் CBSE தான் சிறந்தது என்று முடிவு செய்து நான்கு வருடகளுக்கு முன்பே என் முதல் பெண்ணை சேர்த்து விட்டேன். தெளிவிற்கு நன்றி...

"உழவன்" "Uzhavan" said...

மேற்சொன்ன ICSE பள்ளிகளில் பயில் தோராயமாக ஆண்டுக்கு என்ன செலவாகும்? அட்மிசன் எந்த அடிப்படையில் தருகிறார்கள்?

Vidhoosh said...

நன்றி சண்முகசுந்தரம். நல்லது. :)

நன்றி நவநீத். ஐசிஎஸ்சி பள்ளிக்கு ஆண்டுக்கு முப்பதாயிரம் - நாற்பதாயிரம் வரை ப்ரைமரிக்கு ஆகலாம். இந்த கட்டணம் மதிய உணவு, 2 யூனிபார்ம்கள், புத்தகம், நோட்டு, மற்றும் காலணிகள் உள்ளடக்கியது. நவம்பர் டிசம்பர் மாதங்களில் விசாரித்துக் கொள்ளுங்கள். ஒரு இண்டர்வியூவோடு அட்மிஷன் சாதரணமாகவே கிடைத்து விடுகிறது. சில பள்ளிகள் கேபிடேஷன் / நன்கொடை வசூலிக்கிறார்கள்.

Noolulagam said...

நல்ல பகிர்வு வாழ்த்துக்கள்.

// ஈஸியா இங்கிலீஷ் பேச இங்க வாங்க //
http://www.noolulagam.com/product/?pid=137