பனை மரமே

பனை மரமே பனை மரமே
ஏன் வளர்ந்தாய் பனை மரமே?
நான் வளர்ந்த காரணத்தை
நல்லவரே சொல்லுகின்றேன்
படுக்க நல்ல பாயாவேன்
வசிக்க நல்ல வீடாவேன்
வெட்ட நல்ல விறகாவேன்
வீடு கட்ட மரமாவேன்

3 comments:

Unknown said...

Dear Sir/Madam,
In 1960s, Mr R Ayyasami Called as Radio Anna was an anchor point for all children's programs like Muthu Kuvial & Pappa Malar in AIR, Chennai. He has written many songs like this one, 'பனை மரமே பனை மரமே ஏன் பிறந்தாய் பனை மரமே'. His Bala Ramayanam was very famous. It starts with, 'ஜகம் புகழும் புண்ணிய கதை ராமனின் கதையே'. There was a child artist by name Jayashree, who had sung most of his songs. I am very keen to listen to these songs.But notable to get any of these. Can you please help me out in this regard.
Thanks,
COL DIWAKAR

Vidhoosh said...

http://music.cooltoad.com/music/song.php?id=468523&PHPSESSID=06ba4dc2b42fd8d8aeaf259be1202779


col.திவாகர் சார். :) உங்கள் வருகைக்கு நன்றி. இப்போதைக்கு உடனடியாக "ஜகம் புகழும்" பாடலின் இணைப்பைக் கொடுத்துள்ளேன். கேட்டுப் பாருங்கள். விரிவாகப் பகிர்கிறேன். நன்றி.

அன்புடன்
விதூஷ்.

Vidhoosh said...

பாடகர்கள்: P. லீலா, S. ஜானகி

ஜகம் புகழும் புண்ணிய கதை ராமனின் கதையே
உங்கள் செவி குளிர பாடிடுவோம் கேளுங்கள் இதையே (ஜகம்)

இகபர சுகம் எல்லாம் அடைந்திடலாமே
இந்த கதை கேட்கும் எல்லோருமே
இனிக்குது நாவெல்லம் உரைத்திடும் போதிலே
இணையே இல்லாத காவியமாகும் (ஜகம்)

அயோத்தி மன்னன் தசரதனின் அருந்தவத்தால்
அவன் மனைவி கௌசல்யா கைகேயி சுமித்திரை
கருவினிலே உருவானார் ராம லக்ஷ்மணன்
கனிவுள்ள பரதன் சத்ருகுனர் நால்வர்

நாட்டினர் போற்றவே நால்வரும் பல கலை
ஆற்றலும் அடைய மன்னன் வளர்த்து வந்தானே

காசியில் கௌசிகன் யாகத்தை காக்கவே
கண்மணி ராம லக்ஷ்மணனை அனுப்பினனே
தாடகை சுபாகுவை தரையிலே வீழ்த்தியே
தவசிகள் யாகம் காத்து ஆசி கொண்டனரே
பாதையில் அகலிகை சாபத்தை தீர்த்தபின்
சீர்பெரும் மிதிலை நகர் நாடி சென்றனரே

வீதியில் சென்றிடும் போதிலே ராமன்
சீதையை கன்னி மாட மீதிலே கண்டான்
காதலினால் இருவர் கண்களும் கலந்தன
கன்னியை வில் ஒடித்து சொந்தம் கொண்டான்

ஆணவதால் அறிவிழந்த பரசுராமன்
அகந்தைதனை அடக்கி ராமன் வெற்றி கொண்டான்
அரும்புதல்வனின் வீரத்தை கண்ட மன்னன்
அளவில்லா ஆனந்த நிலையைக் கண்டான் (ஜகம்)

மன்னவன் தசரதன் கண்மணி ராமனுக்கு
மணிமுடி சூட்டவே நாள் குறித்தானே
மக்கள் யாவரும் மகிழ்வுடன் நகரையே
மகர காரணத்தால் அலங்கரித்தாரே

மந்தரை போதனையால் மனம் மாறி கைகேயி
மணிமுடி பரதன் சூடி நாட்டை ஆளவும்
வனத்தில் ராமன் பதினான்காண்டுகள்
வாழவும் மன்னனிடம் வரமதை கேட்டாள்

அந்த சொல்லை கேட்ட மன்னர்
மரணமூர்ச்சை அடைந்த பின்னர்
ராமனையும் அழைக்க செய்தாள்
தந்தை உன்னை வனம் போக சொல்லி
தம்பி பரதனுக்கு மகுடத்தை தந்தார் என்றாள்

சஞ்சலம் இல்லாமல் அஞ்சன வண்ணனும்
சம்மதம் தாயே என வணங்கிச் சென்றான்
மிஞ்சிய கோபத்தால் வெகுண்டு வில் எடுத்த
தம்பி இலக்குவனை சாந்தம் ஆக்கினான்

இளையவனும் ஜானகியும் நிழல் போல் தொடரவே
மரவுரி தரித்து ராமன் செல்வதை கண்டு
கலங்கிய நாடு மக்கள் கண்ணீர் சிந்தியே
புயலென போவதன்று தடுத்தனர் சென்று

ஆறுதல் கூறியே கார்முகில் வண்ணன்
அன்புடன் அவர்களிடம் விடையும் கொண்டானே
அன்னையும் தந்தையும் சொன்ன சொல் காக்கவே
அண்ணலும் கானகத்தை நாடி சென்றானே (ஜகம்)

கங்கை கரை அதிபன் பண்பில் உயர்ந்த குகன்
அன்பால் ராமபிரான் நண்பனாகினான்
பஞ்சவடி செல்லும் பாதையை காட்டினான்
அஞ்சனவண்ணன் அங்கு சென்று தங்கினான்

ராவணனின் தங்கை கொடியவள் சூர்ப்பனகை
ராமபிரான் மீது மையல் கொண்டாள்
கோபம் கொண்ட இளையோன் கூர் அம்பால் அவளை
மானபங்கம் செய்து விரட்டிவிட்டான்

தங்கையின் போதனையால் தச கண்ட ராவணன்
ஜானகி தேவியை சிறை எடுத்தான்
நெஞ்சம் கனலாகி கண்கள் குளம் ஆகி
தம்பியுடன் தேவியை தேடிச் சென்றான்
ராமன் தேடி சென்றான்

வழியிலே ஜடாயுவால் விவரமெல்லாம் அறிந்தான்
வாயு மைந்தன் அனுமானின் நட்பைக் கொண்டான்
ஆழியை தாண்டியே இலங்கை சென்ற அனுமான்
அன்னையை அசோக வனத்தில் கண்டான்

ராமசாமியின் தூதன் நானடா ராவணா என்றான்
ஹனுமான் லங்காபுரியை தீக்கிரை ஆக்கி கிஷ்கிந்தை சென்றான்
கண்டேன் அன்னையை என்றே ராமனை சேவித்தே நின்றான்
கடலை கடந்து அய்யன் வானர சேனையுடன் சென்றான்
வானர சேனையுடன் சென்றான்

விபீஷணனின் நட்பை கொண்டான்
ராவணனை வென்றான்
வீர மாதா ஜானகிதேவியை தீக்குளிக்கச் செய்தான்

கற்பின் கனலை கனிவுடன் ஏற்று
அயோத்தி நகர மீண்டான்
கலங்கிய மக்கள் களிப்புற ராமன்
அரசுரிமை கொண்டான் (ஜகம்)

அதோ ஸ்ரீ ராமச்சந்திர பிரபு

ஸ்ரீ ராகவம் தசரததாத்மஜம(அ)ப்ரமேயம்
சீதாபதிம் ரகுவர்ண வய ரத்ன தீபம் |
ஆஜானுபாஹும(அ)ரவிந்த தலாயதாக்க்ஷயம்
ராமம் நிஸாச்சரவினஸ்கரம் நவாமி ||